ETV Bharat / city

மாலை 5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM - ஈடிவி பாரத் டாப் 10

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்...

etv-bharat-top-10-news
etv-bharat-top-10-news
author img

By

Published : Dec 13, 2020, 5:19 PM IST

ரூ.25.96 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கினார் துணை முதலமைச்சர்

தேனி: நவீனமயமாக்கப்பட்ட கூட்டுறவு கடன் சங்க கட்டடத்தை திறந்து வைத்து பயனாளிகளுக்கு ரூ.25.96 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

'தமிழ்நாட்டில் 2000 மினி கிளினிக் சேவை' - நாளை தொடக்கம்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை 2000 மினி கிளினிக்குகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கிறார்.

செவிலியரைப் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் - மு.க. ஸ்டாலின்

சென்னை: கரோனா அபாயம் நீங்காத நிலையில், செவிலியரின் சேவை மற்றும் தேவை கருதி அவர்களைப் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

’அதிமுக தலைமையில் மெகா கூட்டணி’: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: அதிமுக தலைமையில் அமையும் மெகா கூட்டணியில், தற்போது திமுகவில் இருப்பவர்களும் வந்து இணைவார்கள் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

டிஆர்பி முறைகேடு: ரிபப்ளிக் தொலைக்காட்சி சி.இ.ஓ. கைது!

மும்பை: டிஆர்பி வழக்கு தொடர்பாக ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செயல் அலுவலர் விகாஷ் காஞ்சந்தனி கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி கால் சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

போலி கால் சென்டர் நடத்தி லோன் வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட ஒரு பெண் உள்ளிட்ட 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ஜெயம் ரவி ரசிகர்களுக்கு ட்ரீட்: பூமி படத்தின் பாடல்கள் நாளை வெளியீடு!

சென்னை: நடிகர் ஜெயம் ரவியின் 25ஆவது படமான பூமி திரைப்படத்தின் பாடல்கள் நாளை வெளியாகிறது.

பாடலாசிரியர் சினேகன் செல்ஃபோன் திருட்டு - இளைஞருக்கு தர்ம அடி!

மதுரை விமான நிலையத்தில் பாடலாசிரியர் சினேகனின் செல்போனை திருடியதாக இளைஞர் ஒருவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விஸ்வநாதன் ஆனந்த் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கும் பிரபல இயக்குநர்!

ஹைதராபாத்: சதுரங்க ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்க உள்ளார்.

இரட்டை சதங்களின் நாயகன் ஹிட்மேன்!

கடந்த 2017ஆம் ஆண்டு டிச.13ஆம் தேதி நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது மூன்றாவது இரட்டை சதத்தைப் பதிவு செய்து இன்றோடு மூன்றாண்டுகள் நிறைவடைகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.