ETV Bharat / city

எண்ணூர் கழிமுகத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை! - சென்னை செய்திகள்

எண்ணூர் சதுப்பு நிலப்பகுதிகளில், 600 ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதிகளை பொதுத்துறை நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், இதனைத் தடுக்க வேண்டும் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Environmental activists
Environmental activists
author img

By

Published : Nov 19, 2020, 8:25 PM IST

சென்னை: இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன், "அடையாறு, கூவம் ஆகிய இரண்டு ஆறுகளைவிட கொசஸ்தலை ஆறு அதிக நீரை கொண்டுசெல்லும் திறன்கொண்டது. இந்த ஆறு, ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி நீர் கொண்டுசெல்லும் திறன்கொண்டது. தற்போது 50 ஆயிரம் கனஅடி நீர்கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எண்ணூர், பழவேற்காடு சதுப்பு நிலப் பகுதிகளில் தொடர்ந்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்துவருகின்றன. 2015ஆம் ஆண்டுக்கு முன்புவரை 2,000 ஏக்கர் சதுப்பு நிலப்பகுதிகள் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டன. அதன் பின்பு இதுவரை 600 ஏக்கருக்கும் மேற்பட்ட சதுப்பு நிலப்பகுதி ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளது.

சூழல் தொடர்பான கேடுகளை நமக்கு உணர்த்தும் வகையில், 2015 பெருவெள்ளம் அமைந்தது. இருப்பினும் அதன் பின்னும் அந்தப் பகுதியில் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுவருகின்றன. இதன் காரணமாக வட சென்னை, மேற்கு சென்னை, திருவள்ளூர், பொன்னேரி ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் சேதம் ஏற்படும்.

இந்த ஆக்கிரமிப்புகளால், அப்பகுதியில் கடல் அரிப்பு, கடல் நீர் உட்புகுதல், நிலத்தடி நீருடன் கடல் நீர் கலத்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

பூவுலகின் நண்பர்கள்

எண்ணூர் பழவேற்காடு சதுப்பு நிலப்பகுதி ஒரு காலநிலை சரணாலயமாக அறிவிக்க வேண்டும் இதனை மத்திய மாநில அரசுகள் பாதுகாக்க வேண்டும். தவறினால், வட சென்னை, திருவள்ளூரில் உள்ள மக்கள் பாதிக்கப்படுவர்.

கொசஸ்தலை ஆற்றில் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டால், அது 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை விட மிகப் பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தும்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாளை மறுநாள் (நவ.21) சென்னை வந்து, காமராஜர் துறைமுகத்தில் உள்ள புதிய கப்பல் தளத்தை தொடங்கி வைக்கிறார். காமராஜர் துறைமுகம் தொடர்ந்து எண்ணூர் சதுப்பு நிலப்பகுதியை ஆக்கிரமித்து வருகிறது. அதேபோல அப்பகுதியில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள், சாம்பல் கழிவுகளை சதுப்பு நிலப்பகுதியில் கொட்டி மாசுபடுத்துவது மற்றும் அங்குள்ள நிலங்களை ஆக்கிரமிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது.

அதேபோல் அதானி நிறுவனத்தின் புதிய விரிவாக்கத் திட்டங்களால் ஆயிரம் ஏக்கர் சதுப்பு நிலங்கள் பறிபோகும் அபாயம் உள்ளது இதனை தடுத்து நிறுத்த வேண்டும்" என்று கூறினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய எண்ணூர் மீனவர்கள் பிரதிநிதி ரவீந்திரன், "ஆக்கிரமிப்புகளால் எண்ணூர் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

நெட்டுகுப்பம் பகுதியில் நீர் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. பல நிறுவனங்கள் சுற்றுச்சூழல் விதிமுறைகள் பின்பற்றுவதாக கூறி அனுமதி வாங்கிவிட்டு, பின்பு அதனை அப்பட்டமாக மீறி செயல்படுகின்றனர்" எனக் குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: பேரறிவாளன் விடுதலை குறித்த பாடல் இணையத்தில் வெளியீடு

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.