ETV Bharat / city

பாலியல் குற்றங்களுக்கு என்கவுன்டர் தீர்வாகாது: மருத்துவர்கள் கருத்து - sexual assault encounter

சென்னை: பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு என்கவுன்டர் மட்டுமே தீர்வாகாது என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பாலியல் குற்றங்களுக்கு என்கவுண்டர் தீர்வல்ல மருத்துவர்கள் சங்கம் கருத்து
doctors association for social equality
author img

By

Published : Dec 16, 2019, 3:07 AM IST

Updated : Dec 16, 2019, 8:08 AM IST

இதுகுறித்து சென்னையில் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

‘நாட்டில் நிலவும் சமூக பொருளாதார பிரச்னைகள் தொடர்பாக அனைத்திந்திய முற்போக்கு பேரவை இயங்கிவருகிறது. இந்த அமைப்பில் இந்தியாவில் உள்ள பல்வேறு தொழில்நுட்ப, பொருளாதார வல்லுநர்கள், அறிவியலாளர்கள், அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளனர்.

கருத்தரங்கம்

இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால் பல்வேறு பிரிவுகளில் தொழிலாளர்கள் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த அமைப்பு சார்பாக இந்திய அளவில், செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிப்பது தொடர்பாக, இந்திய நிலைமைகளில் சமூக மற்றும் பொருளாதார நீதி, உருவாகிவரும் போக்குகள் என்ற தலைப்பில் மூன்று நாள் கருத்தரங்கம் வரும் ஜனவரி மதம் 24, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா

மத்திய அரசு தவறான கொள்கைகளைக் கடைபிடித்து வருவதை எங்கள் அமைப்பு தொடர்ந்து கண்டித்துவருகிறது. குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நடைமுறை படுத்தக்கூடாது என்று நாடுமுழுவதும் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றோம். நாட்டின் ஒற்றுமையைக் காக்க மதசார்பின்மையை நிலைநிறுத்த இந்த சட்டத்தை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

பொருளாதார நெருக்கடி

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையினால் வேலைவாய்ப்பு இல்லாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். பொருளாதார நெருக்கடி காரணமாக குறிப்பாக பட்டியலினத்தவர், சிறுபான்மையினர் அதிக அளவில் வேலையிழந்து வருகின்றனர். இதனை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்கவுன்டர் தீர்வு இல்லை!

பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க என்கவுன்டர் தீர்வு இல்லை. சட்டப்படி குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையைக் கொடுக்க வேண்டும். பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகத்தில் பாலியல் வேறுபாடு குறித்த பாடங்களை கொண்டுவர வேண்டும்’ என கூறினார்.

சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் பேட்டி

இதையும் படியுங்க: 'கர்ப்பம் ஆவதற்கு முன்பே குழந்தைக்கு பெயர் வைக்க முடியாது' - நடிகை கஸ்தூரி

Intro:பாலியல் வன்முறைகளுக்கு
என்கவுண்டர் மட்டும் தீர்வல்ல
ரவீந்தரநாத் பேட்டி
Body:பாலியல் வன்முறைகளுக்கு
என்கவுண்டர் மட்டும் தீர்வல்ல
ரவீந்தரநாத் பேட்டி

சென்னை,

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு என்கவுண்டர் மட்டுமே தீர்வல்ல எனவும்,சரியான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என ரவீந்தரநாத் தெரிவித்தார்.

சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொது செயலாளர் ரவீந்திரநாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

நாட்டில் நிலவும் சமூக பொருளாதார பிரச்சனைகள் தொடர்பாக அனைத்திந்திய முற்போக்கு பேரவை இயங்கி வருகிறது. இந்த அமைப்பில் இந்தியாவில் உள்ள பல்வேறு தொழில்நுட்ப, பொருளாதார வல்லுநர்கள், அறிவியலாளர்கள், அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவர்கள் இயங்கி வருக்கின்றனர்.

இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால் பல்வேறு பிரிவுகளில் தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த அமைப்பு சார்பாக இந்தியளவில், செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிப்பது தொடர்பாக, இந்திய நிலைமைகளில் சமூக மற்றும் பொருளாதார நீதி, உருவாகிவரும் போக்குகள் என்ற தலைப்பில் மூன்று நாள் கருத்தரங்கம் வரும் ஜனவரி மதம் 24,25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறுகிறது.

மத்திய அரசாங்கம் தவறான கொள்கைகளை கடைபிடித்து வருகிறது. இதனை அனைத்திந்திய முற்போக்குப் பேரவை தொடர்ந்து கண்டிக்கிறது.

குடியுரிமை சட்டத்தை நடைமுறை படுத்தக்கூடாது என்று நாடுமுழுவதும் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நாட்டின் ஒற்றுமையை காக்க மதசார்பின்மையை நிலைநிறுத்த இந்த சட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

பாலியல் வன்கொடுமைகளை தடுக்க என்கவுண்டர் தீர்வு இல்லை. சட்டப்படியான அனுக்குமுறையினை கையாண்டு உண்மையான குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை கொடுக்க வேண்டும். மேலும், பாலியல் குறித்து சமூக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நிர்பயா சட்டத்தில் உள்ள நிதியை கூட மத்திய மாநில அரசுகள் முழுமையாக பயன்படுத்தவில்லை.

பள்ளி மாணவர்களுக்கும் பாடப்புத்தகத்தில் பாலியல் வேறுபாடு குறித்து கூற வேண்டும்.
பாலியல் வன்முறையில் ஈடுப்படும் சரியான நபர்களை கண்டறிந்து தண்டிக்க வேண்டும். அந்த நேரத்திற்கு பிரச்சனையை முடிவுகட்ட நடவடிக்கை கூடாது.
நிர்பயா நிதியை முழுமையாக மத்திய, மாநில அரசுகள் பயன்படுத்த வேண்டும்.

கூவம் நதியோரம் இருக்க கூடிய வீடுகளை அரசு அகற்றி வருகிறது அவர்கள் தற்போது வீடு இல்லாமல் கழிப்பிடங்களில் தங்கும் நிலைக்கு வந்துள்ளனர்.எனவே அரசு உடனடியாக அவர்களுக்கு மாற்று இடம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையினால் வேலைவாய்ப்பு இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். பொருளாதார நெருக்கடி காரணமாக பிற்படித்தப்பட்டோர், தலித்துகள், சிறுபான்மையினர் அதிக அளவில் வேலை இழந்து வருகின்றனர். இதனை அரசு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.Conclusion:
Last Updated : Dec 16, 2019, 8:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.