சென்னை: புதியதாக நடைமுறைப்படுத்தப்பட்ட விதிமுறைகளுக்கு எதிரான ஸ்விகி ஊழியர்களின் இரண்டாம் நாள் போராட்டத்திற்குப் பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஸ்விகி ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் உணவுப்பொருட்களை, வீடு தேடிக்கொண்டு அளிக்கும் நிறுவனங்களின் முன்னணியாகத் திகழும் ஸ்விகி (Swiggy) நிறுவனத்தில் சென்னை முழுவதும் 500-க்கும் மேலான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். கரோனா தொற்று காலத்தில் ஊரடங்கு நடைமுறையில் இருந்தபோதும் கூட, இவர்களின் பணி அளப்பரியது. ஆனால், உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் இல்லாதநிலையில் இந்த ஊழியர்கள் தினமும் பயணம் செய்கின்றனர்.
சமீபத்தில் ஸ்விகி நிறுவனம் கொண்டு வந்த புதிய விதிமுறைகள், இவர்களின் உழைப்பை, மேலும் சுரண்டும்விதமாக அமைந்துவிட்டதாக இந்த ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், ஸ்விகியில் பணிபுரிபவர்களுக்கு வாரம் ஒருமுறை ஊக்கத்தொகை வழங்கப்படுவது ரத்து செய்யப்படுவதோடு, பணிநேரம் 16 மணிநேரம் வரை அதிகரித்துள்ளது. இதனால், மாதம் ரூ.12,000 சம்பாதிப்பதே மிகவும் கடினமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால், இந்நடைமுறைக்கு எதிர்ப்புத்தெரிவித்து ஸ்விகி ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார்.
அதில், "தனியார் உணவு விநியோக நிறுவனமான Swiggy-ல் பணியாற்றும் ஊழியர்கள் தாங்கள் தொழிலாளர் நல விதிமுறைகளுக்கு எதிராக நடத்தப்படுவதாகக் கூறி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு Swiggy நிறுவனம் செவிசாய்க்கவில்லை என்றும் அவர்கள் புகார் கூறியுள்ளனர். இப்பிரச்னையைத் தீர்த்து வைக்க தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-
தனியார் உணவு விநியோக நிறுவனமான Swiggy-ல் பணியாற்றும் ஊழியர்கள் தாங்கள் தொழிலாளர் நல விதிமுறைகளுக்கு எதிராக நடத்தப்படுவதாக கூறி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். (1/3) @CMOTamilnadu
— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">தனியார் உணவு விநியோக நிறுவனமான Swiggy-ல் பணியாற்றும் ஊழியர்கள் தாங்கள் தொழிலாளர் நல விதிமுறைகளுக்கு எதிராக நடத்தப்படுவதாக கூறி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். (1/3) @CMOTamilnadu
— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 20, 2022தனியார் உணவு விநியோக நிறுவனமான Swiggy-ல் பணியாற்றும் ஊழியர்கள் தாங்கள் தொழிலாளர் நல விதிமுறைகளுக்கு எதிராக நடத்தப்படுவதாக கூறி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். (1/3) @CMOTamilnadu
— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 20, 2022
படித்த இளைஞர்கள் பலர் தங்கள் படிப்புக்குரிய வேலை கிடைக்காததால், பல்வேறு இன்னல்களுக்கிடையே இந்த உணவு விநியோகப் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்களிடம் உழைப்புச்சுரண்டல் செய்யப்படுவதை ஆட்சியாளர்கள் அனுமதிக்கக்கூடாது" என அவர் ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பைக்கில் லிஃப்ட் கொடுத்தவரை ஊசிபோட்டு கொன்ற கும்பல் - கொலைகாரர்களைத் தேடும் போலீஸ்