ETV Bharat / city

முதல்வர் தலைமையில் அவசர ஆலோசனை : அமைச்சர்கள் அடங்கிய குழு - டெல்டா மாவட்டங்கள்

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் அரசு உயர் அதிகாரிகளுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மேலும் வெள்ள நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்திட மாவட்ட சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிவுறுத்தினார்.

முதல்வர் தலைமையில் அவசர ஆலோசனை
முதல்வர் தலைமையில் அவசர ஆலோசனை
author img

By

Published : Nov 11, 2021, 12:02 PM IST

Updated : Nov 11, 2021, 1:04 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. நிவாரண நடவடிக்கைகளைக் கண்காணித்து, பணிகளைத் துரிதப்படுத்திட அந்தந்த மாவட்டத்திற்குட்பட்ட அமைச்சர்களையும், மாவட்டங்களுக்கு சிறப்புக் கண்காணிப்பு அலுவலர்களாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களையும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (நவ.11) தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மாவட்டங்களில் மழை, வெள்ள நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து, அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அறிவுறுத்தினார்.

முதல்வர் தலைமையில் அவசர ஆலோசனை

ஆங்காங்கே நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தரமான உணவு, மருத்துவ வசதி மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்படுவதை உறுதி செய்திடவும் அவர் உத்தரவிட்டார்.

குழு அமைப்பு

டெல்டா மாவட்டங்களில் பரவலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்து, பயிர்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும், பயிர் சேத விவரங்களை அறியவும், அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றினை கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் அமைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11-11-2021) உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் தலைமையில் அவசர ஆலோசனை
முதல்வர் தலைமையில் அவசர ஆலோசனை

அமைச்சர்கள் அடங்கிய குழு

இந்தக் குழுவில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

முதலமைச்சருக்கு அறிக்கை

இந்தக் குழுவினர் உடனடியாக டெல்டா மாவட்டங்களுக்குச் சென்று, பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, நிவாரண நடவடிக்கைகளைத் துரிதப்படுத்திட ஏதுவாக முதலமைச்சர் அவர்களுக்கு அறிக்கை தர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Last Updated : Nov 11, 2021, 1:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.