தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில், “தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அரியலூர், கோவை, கடலூர், தர்மபுரி, ஈரோடு, கரூர், பெரம்பலூர், சேலம், சிவகங்கை, தேனி, திருச்சி, திருவண்ணாமலை, திருவாரூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இரு கட்டங்களாக நடைபெற்றது. 91,975 பதவியிடங்களுக்கு இத்தேர்தல் வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில் 18,520 பதவியிடங்களுக்கானவர்கள் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டனர். 27 மாவட்டங்களில் 315 வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணிகள் நடைபெற்றுவருகின்றன. காவல் துறையினர் மூலம் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 16 ஆயிரம் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையில் நான்கு பதவியிடங்களுக்கும் தனித்தனியாக சீட்டுகள் பிரிக்கப்பட்டு தனித்தனியாக வாகுக்குள் எண்ணும் பணிகள் நடைபெறுகின்றன.
துப்புரவு செய்த இடத்தையே ஆளும் வீரியமிகு தாய்; பஞ்சாயத்து தலைவியின் வெற்றிப் பாதை!
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றுகிறார்கள். மத்திய அரசுப் பணி அலுவலர்கள் நுண் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களும் கண்காணிக்கின்றனர். வேட்பாளர்கள் சார்பில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட முகவர்கள் கண்காணிக்கின்றனர். நேர்மையாகவும் அமைதியாகவும் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றுவருகிறது.
வெற்றி வாகை சூடிய முதல் திருநங்கை கவுன்சிலர் ரியா!
இன்று மாலை 5.25 மணி வரையிலான நிலவரப்படி, கிராம வார்டுகளுக்கு 19 ஆயிரத்து 734 பேரும், ஊராட்சி மன்றத் தலைவர் பதவியிடங்களுக்கு 1,141 பேரும் தேர்தெடுக்கப்பட்டனர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் நடந்த தேர்தல்கள்போல் வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்படாமல், வாக்குச்சீட்டுகள் முறையில் தேர்தல் நடத்தப்பட்டதால் வாக்கு எண்ணிக்கை தாமதமாகிறது.
தள்ளாத வயதிலும் தகித்து நின்று வென்று காட்டிய வீரம்மாள்!
முறையாக எண்ணிக்கை நடப்பதாலும் வெற்றிகளை அறிவிப்பதில் தாமதமாகிறது. மற்றபடி திட்டமிட்டு தாமதிக்க ஏதுமில்லை. திமுக தலைவரின் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை. தேர்தல் ஆணையம் நேர்மையாக தேர்தலை நடத்தி வாக்குஎண்ணிக்கையை நடத்திக்கொண்டுவருகிறது. செல்லாத தபால் ஓட்டுகள் விதிகளின் படி இருந்தால் எடுத்துக்கொள்ளப்படும் விதிகள் பின்பற்றப்படாவிட்டால் நிராகரிக்கப்படும்.
73 வயதில் ஊராட்சி மன்றத் தலைவரான மூதாட்டி!
மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களுக்கு சற்று தாமதமானாலும் விரைவில் இணையத்தில் பதிவிடப்படும். வாக்கு எண்ணிக்கை பணியாளர்கள் அதிகம் இருந்தாலும் கண்காணிப்பில் சிரமம் உள்ளது. முறைகேடுகள் ஏதும் இல்லை. அலுவலர்களுக்கு உணவு வழங்கவில்லை என்பது உடனடியாக சரிசெய்யப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
21 வயதில் ஊராட்சி மன்றத் தலைவராக வாகை சூடிய இளம்பெண்!
அரசியல் கட்சிகளுக்கு என்று எந்த பாரபட்சமும் இல்லாமல் அனைத்துப் பணிகளும் சிறப்பாக நடைபெறுகின்றன. இந்தத் தேர்தல் தொடர்பான வாக்கு எண்ணிக்கையில் நேர விரயம் அதிகம் இருப்பதால் தாமதமாகிறது. இன்றைக்குள் வாக்கு எண்ணிக்கை தொடர்பான அனைத்து நிலவரங்களையும் வெளியிட முயற்சி செய்கிறோம்” என்றார்.