ETV Bharat / city

நடத்தை விதிமீறல்! - திமுக கொடிகள் அகற்றம்!

சென்னை: தேர்தல் நடத்தை விதிகளை மீறி சாலைகளில் கட்டப்பட்டிருந்த திமுக கட்சிக் கொடிகளை பறக்கும் படையினர் அகற்றினர்.

chennai
chennai
author img

By

Published : Mar 1, 2021, 7:35 PM IST

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. எனவே, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுத்தொகை வழங்குவதை தடுக்க சென்னையில் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர், துணை ராணுவம், வருவாய் துறையினர் இணைந்து ஆய்வு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும், 48 பறக்கும் படை, 48 நிலை கண்காணிப்பு குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதிகளில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகனச் சோதனை. அப்போது வீரராகவன் தெருவில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி, திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக கொடி மற்றும் பதாகைகள் இருந்ததை பறக்கும் படை அதிகாரிகள் அகற்றினர். மேலும் பாரதி சாலையில் பாண்டியன் என்பவர் காரில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற 2லட்ச ரூபாயை பறிமுதல் செய்து வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: தேர்தல் விதிமுறைகளை மீறி திரையரங்குகளில் அதிமுகவின் விளம்பரங்கள் - திமுக புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.