ETV Bharat / city

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட 8 மீனவர்கள் மீட்பு; விமானம் மூலம் தமிழகம் வருகை - இலங்கை நீதிமன்றம்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட புதுக்கோட்டை மீனவா்கள் 8 பேர் தமிழ்நாடு முதலமைச்சா் முயற்சியால் ஒன்றிய அரசு உதவியுடன் விடுவிக்கப்பட்டு இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னை அழைத்துவரப்பட்டனர்.

மீனவர்கள் தமிழ்நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர்

author img

By

Published : Oct 18, 2022, 4:41 PM IST

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 8 பேர், கடந்த செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி, இயந்திர படகில் கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். நள்ளிரவில் இலங்கை கடற்படையினர் வந்து, தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 8 பேரையும் கைது செய்தனர்.

அதோடு படகு, பிடித்த மீன்கள், வலைகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். அதன் பின்பு மீனவா்களை இலங்கை கொண்டு சென்று, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் புதுக்கோட்டை மீனவர்களின் குடும்பத்தினர், தமிழ்நாடு முதலமைச்சருக்கு, மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகோள்விடுத்தனர்.

இதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு அவசர கடிதங்கள் எழுதி, மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தார். இதையடுத்து இலங்கையில் உள்ள தூதரகத்திற்கு தகவல் கொடுத்து இலங்கை அரசுடன் பேசும்படி ஒன்றிய அரசு கூறியது.

அதன்படி இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்நிலையில் இலங்கை நீதிமன்றம் சிறையில் இருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 8 பேரையும் விடுதலை செய்து, இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. இதை அடுத்து தூதராக அதிகாரிகள் 8 மீனவர்களையும் தமிழ்நாட்டுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்தனர்.

அவர்களுக்கு அனைவருக்கும் பாஸ்போர்ட் விசா இல்லாததால், எமர்ஜென்சி சர்டிபிகேட்கள் வழங்கப்பட்டன. அதோடு 8 பேருக்கும் கரோனா வைரஸ் பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டது. அதன்பின்பு இன்று(அக்.18) அதிகாலை ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் 8 புதுக்கோட்டை மீனவர்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மீனவர்களை, மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். அதன் பின்பு தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனம் மூலம் 8 மீனவர்களும் சென்னை விமான நிலையத்தில் இருந்து, புதுக்கோட்டை அழைத்து செல்லப்பட்டனர்.

இதையும் படிங்க: வெள்ளத்தில் மூழ்கிய சோலார் பார்க்; யூனிட் பகுதியில் நீச்சல் அடித்த யூத்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.