ETV Bharat / city

சென்னையில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா - பின்னணி பாடகர் பிரசன்னா

சென்னை: 'வெற்றி யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் தொடர்ந்து நிலைக்க வேண்டுமென்றால் தோல்வி என்ற இடைப்புள்ளியை யார் கடக்கிறார்களோ அவர்கள்  தான் வெற்றி பெற முடியும்' என்று அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

சென்னையில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா
author img

By

Published : May 17, 2019, 9:43 AM IST

சிகரம் ஆர் சந்திரசேகரின் பிறந்தநாள் மற்றும் அவரின் தந்தையாரின் ஏழாவது நினைவு தினத்தை முன்னிட்டு, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.

விழாவில், அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் பேசுகையில், "ஒவ்வொரு மாணவர்களும் படிக்கும் பாடங்களை குருட்டுத்தனமாக மனப்பாடம் பண்ணாமல், உணர்ந்து படித்து உங்கள் லட்சியங்களுக்கு சிறகுகளை கொடுங்கள். வெற்றி என்பது இறுதிப்புள்ளி தோல்வி என்பது இடைப்புள்ளி. வெற்றி யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அந்த வெற்றிகள் தொடர்ந்து நிலைக்க வேண்டுமென்றால் தோல்வி என்ற இடைப்புள்ளியை யார் கடக்கிறார்களோ அவர்கள்தான் தொடர்ந்து வெற்றிகளை பெற முடியும்." என்று தெரிவித்தார்.

இந்த விழாவில், திரைப்பட இயக்குநர்கள் பேரரசு, பொன்ராம், ராஜா, பின்னணி பாடகர் பிரசன்னா உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகைகளை வழங்கினர்.

பாடங்களை உணர்ந்து படித்து உங்கள் லட்சியங்களுக்கு சிறகுகளை கொடுங்கள் - அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் மாணவர்களுக்கு அறிவுறுத்தல்

சிகரம் ஆர் சந்திரசேகரின் பிறந்தநாள் மற்றும் அவரின் தந்தையாரின் ஏழாவது நினைவு தினத்தை முன்னிட்டு, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது . 

இந்த விழாவில், அப்துல்  கலாமின் அவியல் ஆலோசகர் பொன்ராஜ், திரைப்பட இயக்குனர்கள் பேரரசு, பொன்ராம், ராஜா, பின்னணி பாடகர் பிரசன்னா உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகைகளை  வழங்கினர்.

விழாவில், அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் பேசுகையில்,

டாக்டர் அப்துல் கலாம்  சொன்னார்கள் உறக்கத்தில் வருவதல்ல கனவு உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு என்று.   பகல் கனவு பலிக்காது என்று தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அப்துல் கலாம் சொன்னார் .பகல்கனவு தான் பலிக்கும் என்று. நீங்கள் காணக்கூடிய கனவு உங்களை தூங்க விடாமல் துரத்த வேண்டும். டாக்டர் கலாம்  மாணவர்களுக்கு அறிவியலில் சிறந்த வல்லரசு இந்தியாவை உருவாக்க வேண்டும், தமிழ்நாட்டை உலக நாடுகளுக்கு  இணையான நாடாக உருவாக்க வேண்டும், 2030இல்  எரிசக்தி சுதந்திரம் பெற்ற நாடாக இந்தியா இருக்க வேண்டும் போன்ற கனவை கொடுத்திருக்கிறார். இத்தனை கனவுகளையும் கொடுத்த அப்துல் கலாம்  இந்த கனவை நனவாக்குவது யார் என்று பாராளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் சொன்னார் .அவர்கள் செய்வார்களோ என்று தெரியவில்லை ஆனால் மாணவ-மாணவியர்கள் செய்வார்கள் என்று இரண்டரை கோடி மாணவர்களை அவர் சந்தித்தார். அப்துல் கலாம்  கொடுத்த லட்சியத்தை நிறைவேற்றுவதகும், உங்கள் கனவுகளை நீங்கள் நிறைவேற்றிக் கொள்வதற்கும் இங்கு கூடி உள்ளவர்கள் உங்களுக்கு உதவி செய்கிறார்கள் .

வெற்றி என்பது இறுதிப்புள்ளி. தோல்வி என்பது இடைப்புள்ளி. வெற்றி யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அந்த வெற்றிகள் தொடர்ந்து நிலைக்க வேண்டுமென்றால் தோல்வி என்ற இடைப்புள்ளியை யார் நடக்கிறார்களோ  அவர்கள்  தான் தொடர்ந்து வெற்றிகளை பெற முடியும் . எனவே தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து நீங்கள் வெற்றி பெற வேண்டும் வரும் மே 23-ஆம் தேதி எத்தனை பேர் தோல்வி அடைகிறார்கள்  என்பதை பாருங்கள் அடுத்த தேர்தலுக்கு எப்படி வீர் என்று எழுகிறார்கள் என்று பாருங்கள் இதனை எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டு தோல்வி எல்லாம் தோல்வியல்ல ,லட்சியத்தை நோக்கி நடை போடுங்கள். 

நன்றாக புரிந்து உணர்ந்து படியுங்கள் லட்சியங்களுக்கு சிறகுகளை கொடுங்கள். அந்த அந்த சிறகுகள் உங்களை உயர்த்தும் நீங்கள் உயரம் போது உங்கள் குடும்பம் உயரும் நாடும் உயரும் இந்தியாவும் உயரும் கூடியிருக்கும் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.

பேட்டி மோஜோவில் அனுப்புகிறேன்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.