ETV Bharat / city

தஞ்சாவூர் தேர் மின் விபத்து; திமுக மீது எடப்பாடி குற்றச்சாட்டு - மின்சார விபத்தில் அரசு முன்னெச்சரிக்கை எடுக்கத் தவறியுள்ளது

தஞ்சாவூர் திருவிழா மின்சார விபத்தில் அரசு முன்னெச்சரிக்கை எடுக்கத் தவறியுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மின்சார விபத்தில் அரசு முன்னெச்சரிக்கை எடுக்கத் தவறியுள்ளது

author img

By

Published : Apr 27, 2022, 4:04 PM IST

சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் நடந்த மின்சார விபத்தில் அரசு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் தமிழ்நாட்டில் திமுக அரசு செயலிழந்து விட்டது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மூலம் சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

பிறகு அதிமுக வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ”தஞ்சாவூரில் உயிரிழந்த 11 குடும்பங்களுக்கு 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தஞ்சாவூர் விபத்து மிகுந்த வேதனை அளிக்கிறது. திருவிழா நேரத்தில் அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகம் காவல்துறை இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது தான் 11 உயிரிழப்புக்கு காரணம்.

தமிழ்நாட்டில் தற்போதைய அரசாங்கம் சித்திரை திருவிழாவிலும் முழுமையான பாதுகாப்பை வழங்க தவறிவிட்டது. முதலமைச்சர் நேரில் சென்றாலும் யார் போனாலும் இனி உயிர் திரும்பி வருமா? என கேள்வி எழுப்பிய அவர், இதனால் இனி திருவிழா காலங்களில் எந்த பாதிப்பும் வராது என அரசு உறுதியளிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் திமுக அரசு செயலிழந்து விட்டது. அதிமுக ஆட்சியில் அத்திவரதர் தரிசனத்திற்கு லட்சணக்கண மக்கள் வந்த போதும் அதிமுக அரசு முழுமையான பாதுகாப்பு வழங்கியது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தஞ்சாவூர் தேர் விபத்து; கூடுதல் நிவாரணம் வழங்க அதிமுக கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.