ETV Bharat / city

பழனிசாமி முதல் எடப்பாடி பழனிசாமிவரை... - அதிமுக

சென்னை: அதிமுகவில் அனுபவம் வாய்ந்த பல முன்னணி தலைவர்கள் இருந்தாலும், பல கணிப்புகளுக்கும் இடையே தன்னுடைய ஆளுமைத்திறனால் முதலமைச்சர் வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

cm
cm
author img

By

Published : Oct 7, 2020, 1:37 PM IST

Updated : Oct 7, 2020, 2:19 PM IST

தமிழ்நாட்டின் அரசியலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்து வந்த பாதை...

  • 1954 இல் சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் பழனிசாமி.
  • ஈரோட்டில் உள்ள வாசவி கல்லூரியில் இளங்கலை விலங்கியல் பட்டப்படிப்பு பயின்றார்.
  • கல்லூரி காலத்திலேயே எம்ஜிஆர் மீது கொண்ட தீவிர ஈடுபாட்டால், செங்கோட்டையன் மூலம் அரசியலில் அடியெடுத்து வைத்தார்.
  • 1974 இல் சிலுவம்பாளையம் அதிமுக கிளைக் கழகச் செயலாளராக கட்சிப்பணியை தொடங்கினார் பழனிசாமி.
  • எம்ஜிஆர் மறைவுக்குப்பின் ஜெயலலிதாவுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தார்.
  • 1989 இல் முதல் முறையாக எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியில் ஜெ அணி சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்ட பழனிசாமி வெற்றி பெற்றார்.
  • பின்னர், சேலம் மாவட்ட அதிமுகவினரிடையே எடப்பாடி பழனிசாமி என்ற அடைமொழி பிரபலமானது.
  • 1991 இல் 2 ஆவது முறையாக எடப்பாடி தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்கு தேர்வானார். அதிமுகவின் சேலம் மாவட்ட செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
  • 1998 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிசாமி, வெற்றி வாகை சூடினார்.
  • 2003 ஆம் ஆண்டு சிமெண்ட் வாரியத் தலைவராகவும், 2006 இல் அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளராகவும் எடப்பாடி பழனிசாமியை நியமித்தார் ஜெயலலிதா.
    முதலமைச்சர் நாற்காலி எடப்பாடி பழனிசாமியை தேடி வந்தது

  • 2007 ஆம் ஆண்டு அதிமுக அமைப்பு செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி.
  • 2011 இல் 3 ஆவது முறையாக எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியிலிருந்து உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர், நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.
  • 2014 ஆம் ஆண்டு அதிமுக தலைமை நிலைய செயலாளராக பணியமர்த்தப்பட்டார்.
  • 2016 ஆம் ஆண்டு 4 ஆவது முறையாக மீண்டும் எடப்பாடி தொகுதியின் உறுப்பினராக தேர்வானவர், பொதுப்பணித்துறை அமைச்சரானார்.
  • அதிமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக உருவெடுத்த எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய நால்வரில் ஒருவரானார்.
  • 2017 இல் ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுகவில் ஏற்பட்ட சலசலப்புகளுக்கு இடையே, முதலமைச்சர் நாற்காலி எடப்பாடி பழனிசாமியை தேடி வந்தது.
  • கருத்து வேறுபாட்டால் பிரிந்திருந்த ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைந்த பிறகு, கட்சியை நிர்வகிக்கும் தலைமை பொறுப்பான ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்ஸும், இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ்ஸும் தேர்வாயினர்.

தற்போது அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி: முழு கள நிலவரங்களின் தொகுப்பு!

Last Updated : Oct 7, 2020, 2:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.