ETV Bharat / city

வாக்காளர் அட்டை புக் செய்யுங்கள்.. காத்திருக்கிறது பிறந்த நாள் பரிசு.. - பிறந்தநாள் பரிசு வீடு தேடி வரும்

17 வயது முடிந்தவர்கள் வாக்காளர் அட்டைக்கான அட்வான்ஸ் புக்கிங்காக ஆன்லைனில் அப்ளை செய்தால், விண்ணப்பதாரரின் 18 வது பிறந்த நாளில் வீட்டிற்கு பரிசாக வாக்காளர் அடையாள அட்டை வந்து சேரும் என்று இந்திய தேர்தல் அதிகாரி அனுப் சந்திரா பாண்டே தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 27, 2022, 6:27 PM IST

சென்னை ரிப்பன் அலுவலக வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, தமிழக தேர்தல் ஆணையம் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கும் விழாவில் இன்று (ஆக.27) நடந்தது. இதில் பங்கேற்ற இந்திய தேர்தல் ஆணையர் அனுப் சந்திரா பாண்டே, வெற்றி பெற்ற 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியின் போது மேடையில் பேசிய தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்திய பிரதா சாகு, "தமிழகத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்த இந்தப் போட்டிகளுக்கு இந்திய தேர்தல் அதிகாரியே தமிழகத்திற்கு வந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குவார் என நினைக்கவில்லை. சுதந்திரம் பெற்ற பிறகு, பல்வேறு நாடுகளில் தேர்தல் நடத்துவதில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தபோதும், இந்தியாவில் அது போன்று எந்த பிரச்சனையும் வரவில்லை. அதனால்தான், தற்போது மிகப்பெரிய ஜனநாயகமாக இந்தியா உள்ளது.

இந்திய தேர்தல் அதிகாரி அனுப் சந்திரா பாண்டே

கடந்த 1953-ல் 18 % வாக்குகள் தான் பதிவாகிய நிலையில், தற்போது 73 % வாக்குகள் பதிவாகிறது. 100 % வாக்குகள் பதிவு ஆகும்போது நாட்டின் ஜனநாயகம் மேலும் வலுப்பெறும். கரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நேரத்தில் இணைய வழி மூலம் இப்போட்டிகளை நாங்கள் போட்டி நடத்தினோம். நினைத்ததை விட மக்கள் ஆர்வமாக போட்டியில் பங்கேற்றனர். 18 பிரிவுகளில் நடந்த இப்போட்டிகளில் சில போட்டிகள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் என நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் " எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய இந்திய தேர்தல் அதிகாரி அனுப் சந்திரா பாண்டே, "உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. இளைஞர்களின் பங்களிப்பு நாட்டின் ஜனநாயகத்திற்கு மிகவும் முக்கியம். அந்த காலங்களில் வாக்காளர் பட்டியலில் பெண்கள் இவருடைய பெண், மனைவி என குறிப்பிட்ட காலங்கள் போய் தற்போது மொத்தமுள்ள வாக்காளர் பட்டியலில் 50% பெண்கள் உள்ளனர்.

ஒரு வாக்காளர்கூட விடுபடக்கூடாது: இந்தியாவில் மக்கள் 16% மட்டுமே கல்வி அறிவு பெற்றவர்களாக இருந்த காலத்தில் வாக்காளர்களுக்கு சின்னம் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி ஜனநாயகம் வளர்க்கப்பட்டது. தற்போது இந்தியா மிகப்பெரிய ஜனநாயகமாக வளர்ந்துள்ளது. ஒரு வாக்காளர் கூட விடுபட்டு விட கூடாது என்பது தான் தேர்தல் ஆணையத்தின் இலக்கு. உலகில் இளமையான நாடும் மற்றும் இளைஞர்கள் அதிகம் உள்ள நாடும் இந்தியா தான்.

முன் பதிவு செய்தால், வாக்காளர் அட்டை பரிசு: வாக்காளர் பட்டியல் ஆண்டிற்கு ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் என 4 காலாண்டு அளவில் வெளியிடப்படுகிறது. ஜனவரியில் 18 வயது பூர்த்தி செய்பவர்கள் ஏப்ரலில் வெளி வரும் பட்டியலில் சேர்ந்து கொள்ள முடியும். அதேபோல ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய மாதங்களில் இடைப்பட்ட காலத்தில் 18 வயது பூர்த்தி செய்தால் அடுத்து அடுத்து வரும் வாக்காளர் பட்டியலில் பெயர் இணைக்கப்படும்.

சினிமா டிக்கெட் முன்னரே பதிவு செய்து கொள்வதைப் போலவே, 17 வயது முடிந்தவர்கள் வாக்காளர் அட்டைக்கான அட்வான்ஸ் புக்கிங் ஆன்லைன் மூலமாக தற்போது செய்துகொள்ள முடியும். 18 வது பிறந்த தினத்தில் உங்கள் வீட்டிற்கு பரிசாக வாக்காளர் அடையாள அட்டை வந்து சேரும். 17 வயது பூர்த்தி ஆனவர்கள் வழிமுறைகளை பின்பற்றி வாக்காளர் அட்டைக்கான முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒரு இளைஞரின் வாக்கைக்கூட தவறவிட விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு, மாவட்ட தேர்தல் அதிகாரியும் மற்றும் மாநகராட்சி ஆணையருமான ககன் தீப் சிங் பேடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: ஜெயலலிதா மரணம் தொடர்பாக 600 பக்க விசாரணை அறிக்கை தாக்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.