ETV Bharat / city

3 மணி செய்திச்சுருக்கம் - TOP 10 NEWS @3PM - cm stalin

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்.

3 மணி செய்திச்சுருக்கம்
3 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Jul 2, 2021, 3:04 PM IST

தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள்?

அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகள் அமல்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்டா வகை வைரஸிலிருந்தும் பாதுகாக்கும் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிகள்!

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிகள் டெல்டா வகை வைரஸ்களிலிருந்தும் பாதுகாப்பை அளிக்கும் என அந்நிறுவனம் அடித்து கூறுகிறது.

ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான பாஜகவினரின் வழக்கை தள்ளுபடி செய்க - மாணவி உயர் நீதிமன்றத்தில் மனு

நீட் தேர்வு பாதிப்புகளை ஆராய தமிழ்நாடு அரசு அமைத்துள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவை எதிர்த்து பாஜக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி மாணவி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

ஆறுமுகசாமி ஆணையம் ஏன் 3 மாதங்களில் அறிக்கையைத் தாக்கல் செய்யக்கூடாது? - உயர் நீதிமன்ற நீதிபதிகள்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் மூன்று மாதங்களில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யும்படி ஏன் உத்தரவிடக் கூடாது? என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தியாகராஜ பாகவதரின் மகள்வழி பேரனுக்கு வீடு வழங்கிய முதலமைச்சர்!

தியாகராஜ பாகவதரின் மகள் வழி பேரனுக்கு ஒதுக்கப்பட்ட, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பில் உள்ள வீட்டுக்கான திறவுகோலை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஜூலை 2) வழங்கினார்.

வன்னியருக்கான 10.5% இட ஒதுக்கீடு வழங்க தடை விதிக்க முடியாது - மறுத்த உச்ச நீதிமன்றம்

வன்னியருக்கான 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதற்குத் தடை விதிக்கமுடியாது என உச்ச நீதிமன்றம் மறுப்புத்தெரிவித்துள்ளது.

விவசாயிகள், பாஜகவினர் இடையே மோதல்: 200 விவசாயிகள் மீது எஃப்.ஐ.ஆர்!

காசிப்பூர் எல்லையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பொது அமைதிக்கு பாதிப்பை உருவாக்கியதாகவும், பாஜக தொண்டர்களின் வாகனங்களை சேதப்படுத்தியதாகவும் 200 விவசாயிகள் மீது காசியாபாத் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

’தோழர் சங்கரய்யாவின் வாழ்க்கை இன்றைய இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று’ - இயக்குநர் பாரதிராஜா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யாவின் 100ஆவது பிறந்தநாள் இந்த மாதம் வர உள்ள நிலையில், இயக்குநர் பாரதிராஜா அவருக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வைரலாகும் சிம்புவின் புதிய தோற்றம்!

நடிகர் சிம்புவின் புதிய தோற்றம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அபியும் நானும், தங்க மீன்கள் வரிசையில் தந்தை-மகள் பாசத்தை சொல்லும் படம்!

மகளின் ஆசையை நிறைவேற்றத் துடிக்கும் மிடில் கிளாஸ் தந்தையின் கதையாக உருவாகியுள்ளது 'ராஜா மகள்'.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.