சட்டப்பேரவையில் பள்ளி கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது, அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 28.60 லட்சத்திலிருந்து, 17.45 லட்சமாக குறைந்துள்ளது என திமுக உறுப்பினர் பொன்முடி தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், ” மக்களின் மனநிலை தனியார், சிபிஎஸ்சி, மெட்ரிக் போன்று ஆங்கில வழிக் கல்வியை விரும்புவதை அறிந்து உடனே அரசு பள்ளிகளில் அதை அமல்படுத்தினோம். எல்.கே.ஜி, யு.கே.ஜி போன்ற மழலையர் வகுப்புகளையும் அரசு பள்ளியில் தொடங்கியுள்ளோம். மேலும் இந்தியாவிலே தமிழ்நாட்டில்தான் மக்கள் தொகை குறைந்து வருகிறது. அதன் காரணமாகவே அரசு பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது ” என்றார்.
இதையும் படிங்க: 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நீக்கியது ஏன்? - முதலமைச்சர் விளக்கம்!