புதுச்சேரியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் தீவிர வாகனச் சோதனையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே புதுச்சேரி நகரப்பகுதியான பாரதி வீதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுக் கொண்டிருந்த காண்டெய்னர் லாரியில் வணிக வரித்துறையினர் சோதனை நடத்தி ஆவணங்களை கேட்டுள்ளர்.
அப்போது, தவறான தகவல்களை அளித்ததால் சந்தேகமடைந்த வணிக வரித்துறையினர் ஓட்டுனருடன் காண்டெய்னர் லாரியை ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து, காவல் துறையினர் அந்தக் கண்டெய்னர் லாரியை சோதனை செய்த போது வீட்டை காலி செய்த டிவி, மேஜை, இருசக்கர வாகனம் போன்ற பொருள்களை வைத்துள்ளனர்.
பின்னர் உள்ளே சோதனை செய்தபோது மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் (ஹான்ஸ்) மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட மூட்டைகள், 10க்கும் மேற்பட்ட அட்டை பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான போதைப்பொருள்களை காவலர்கள் பறிமுதல் செய்து கைது செய்யப்பட்ட ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: மகாபலிபுரத்தில் ரூ. 230 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் கண்டெடுப்பு!