ETV Bharat / city

மத்திய பட்ஜெட் 2022: திமுக கூட்டணி எம்பி வரவேற்பு - Budget session

மத்திய அரசின் 2022-23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நாட்டை வளர்ச்சிப் பாதையை நோக்கி அழைத்துச்செல்லும் என திமுக கூட்டணிக் கட்சியின் பெரம்பலூர் மக்களவை உறுப்பினரும், ஐஜேகே கட்சியின் நிறுவனருமான டாக்டர் பாரிவேந்தர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணி எம்பி வரவேற்பு
திமுக கூட்டணி எம்பி வரவேற்பு
author img

By

Published : Feb 1, 2022, 4:38 PM IST

சென்னை: இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2022-23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையினை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01.02.2022) நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல்செய்துள்ளார்.

சென்ற ஆண்டினைப்போலவே இந்த ஆண்டும் காகிதம் இல்லாத டிஜிட்டல் வடிவில் நிதிநிலை அறிக்கை தயார்செய்யப்பட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையில்,

  • நீண்டகாலக் கனவாக இருந்துவரும் கோதாவரி – கிருஷ்ணா – பெண்ணாறு – காவிரி நதிகளை இணைக்கும் திட்டம் இறுதி வடிவம் பெற்றது
  • விவசாயிகளின் விளைபொருள்களுக்கான ஆதார விலையை உறுதிப்படுத்த 2.75 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாநில மொழிகள் ஊக்குவிக்கப்படும் என்ற அறிவிப்பு
  • நவீன தொழில்நுட்பத்தின் விளைவாக ஆர்.பி.ஐ. மூலம் டிஜிட்டில் கரன்சி அறிமுகம்
  • டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும்
  • சிறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வழங்கப்படும்
  • இயற்கை வேளாண்மையை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வழிவகை செய்யப்படும்
  • 2022-23ஆம் நிதி ஆண்டு சிறுதானிய வளர்ச்சிக்கான ஆண்டாக அறிவிக்கப்பட்டிருப்பது
  • நாடு முழுவதும் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்த அதிக கவனம் செலுத்தப்படும்.
  • 68 விழுக்காடு ராணுவத்தளவாடங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும்
  • இளைஞர்களுக்காக 60 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்

என்ற திட்டங்கள் நாட்டின் வளர்ச்சியை மையமாகக் கொண்டு நவீன இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தோடு தயாரிக்கப்பட்டதாகவே கருதுகின்றேன். அதனை செயல்வடிவத்திற்கு கொண்டுவருவதற்காக, முனைப்பான திட்டங்களை மக்களின் ஒத்துழைப்போடு மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் எதிர்பார்க்கின்றோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: வளர்ச்சி, கட்டமைப்பு மேம்பாட்டுக்கு வழி வகுக்கும் பட்ஜெட்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.