இது தொடர்பாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் கூறும்போது, “ சிதம்பரம் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உட்பட, அனைத்து அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும், மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும், உடனடியாக பாதுகாப்புக் கவச உடைகளை வழங்கிட வேண்டும்.
நந்தம்பாக்கம் வணிக மையத்தில் உருவாக்கப்பட்டுள்ள கோவிட்-19 பராமரிப்பு மையத்தில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு உணவு, குடி தண்ணீர், கழிப்பிட வசதி, போக்குவரத்து வசதி போன்றவை செய்து தரப்படவில்லை. அவற்றை உடனடியாக செய்து தர வேண்டும். மார்ச் முதல் ஏப்ரல் வரை கூடுதலாக ஒரு மாதம் பணிபுரிந்த பயிற்சி மருத்துவர்களுக்கு, சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும்.
தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் பயிற்சியை முடித்த, பயிற்சி மருத்துவர்களுக்கு உடனடியாக சான்றிதழ்களை வழங்கிட வேண்டும் “ எனக் கூறினார். மேலும் கடந்த 45 நாட்களாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த ஊரடங்கின் பலன்கள் முற்றிலும் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளதால், டாஸ்மாக் மதுபான கடையை திறக்கக் கூடாது என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
இதனிடையே, ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'முதுநிலை மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு உடனடியாக 27% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்' - அன்புமணி ராமதாஸ்