ETV Bharat / city

அரசே கட்டண கொள்ளையில் ஈடுபடலாமா? - டாக்டர்கள் சங்கம் கண்டனம்

author img

By

Published : Nov 23, 2020, 1:48 PM IST

Updated : Nov 23, 2020, 3:15 PM IST

சென்னை: அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விச் செலவையும் அரசே ஏற்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

union
union

இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று மாணவர்களின் பெற்றோர் மற்றும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கப் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ரவீந்திரநாத், ” இராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி இனி கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி என அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு அவ்வாறே செயல்பட்டும் வருகிறது. ஆனால், அக்கல்லூரியின் கல்விக் கட்டணம் ஏற்கனவே இருந்த அளவான ரூ.5.44 லட்சம் என்றே வசூல் செய்யப்படுகிறது. இது அரசே நடத்தும் கட்டணக் கொள்ளையாகும்.

அதேபோல், ஈரோடு மாவட்டம், IRT பெருந்துறை மருத்துவக் கல்லூரியும் தற்போது ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியாக செயல்படுகிறது. அக்கல்லூரிக்கான கட்டணமாக ரூ.3.85 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமல்லாமல், பெற்றோரை தவிப்புக்கு உள்ளாக்கியுள்ள செயலாகும்.

இந்த இரண்டு மருத்துவக் கல்லூரிகளும் அரசு மருத்துவக் கல்லூரிகளாக செயல்படும் போது, தனியார் மருத்துவக் கல்லூரிகளை விடக் கூடுதலாக கட்டணங்களை வசூல் செய்வது எந்த வகையிலும் நியாயமல்ல. அரசே, வசதி படைத்தோருக்காக, மக்கள் வரிப் பணத்தில் தனியாக இரண்டு மருத்துவக் கல்லூரிகளை நடத்துவது போல் இது உள்ளது. இது சமூக நீதிக்கும், ஏழை குடும்ப மாணவர்களுக்கும் எதிரானது.

அரசே கட்டண கொள்ளையில் ஈடுபடலாமா? - டாக்டர்கள் சங்கம் கண்டனம்

எனவே, இதர அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணமான ரூ.13,670 யை, இந்த இரு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கும் நிர்ணயிப்பதோடு, கடலூர் அரசு பல் மருத்துவக்கல்லூரிக்கு ரூ.11,610 யை மட்டுமே கட்டணமாக நிர்ணயிக்க வேண்டும்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக்கல்வியில் 7.5% இட ஒதுக்கீடு வழங்கி, அந்த ஒதுக்கீட்டு மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் ஏழை மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே ஏற்றிருப்பது வரவேற்புக்குரியது. அதேபோல், கரோனா பொது முடக்கத்தால் உருவான பொருளாதார பாதிப்பால் பெற்றோர் மிகப்பெரும் இழப்புகளுக்கு உள்ளாகியுள்ளதை கவனத்தில் கொண்டு, அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கல்விச் செலவையும் அரசே ஏற்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 29 ஆம் தேதி சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் “ என்றார்.

தொடர்ந்து பெற்றோர் தரப்பில் பேசியபோது, கரோனா கால பாதிப்பில் இருந்து தற்போது தான் தாங்கள் சற்றே மீண்டு வருவதாகவும், எனவே கூடுதலாக இல்லாமல் அரசு மருத்துவக்கல்லூரிக்குரிய கட்டணத்தை வசூலிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: சூரப்பா மீதான விசாரணை தொடக்கம்!

Last Updated : Nov 23, 2020, 3:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.