ETV Bharat / city

க்ரீமிலேயர் வருமான வரம்பை ரத்து செய்ய வேண்டும் - ஸ்டாலின்

சென்னை: மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் எனவும், க்ரீமிலேயர் வருமான வரம்பை ரத்து செய்திட வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

stalin
stalin
author img

By

Published : Jul 25, 2020, 10:51 AM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இடஒதுக்கீட்டின் மீது மத்திய பாஜக அரசு நடத்தும் அநியாயமான தாக்குதலை தமிழ்நாட்டில், நாடு முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயம் நீண்ட நாட்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது.

ஏற்கனவே 27 விழுக்காடு இடஒதுக்கீட்டில் 50 விழுக்காடு கூட நிரப்பாமல் வஞ்சித்து, மருத்துவக் கல்வியில் அறவே நிராகரித்து, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் சட்டத்தின்கீழான அடிப்படை உரிமையை விதவிதமாக பாழ்படுத்திவரும் மத்திய பாஜக அரசு, இப்போது 'க்ரீமிலேயர்' வருமான வரம்பிற்கு நிகர சம்பளத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளவும் முடிவு செய்திருப்பதாக வெளிவரும் செய்திகள், இடஒதுக்கீட்டின் இதயத்தில் ஈட்டி கொண்டு பாய்ச்சுவது போல் இருக்கிறது.

மேலும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 2015ஆம் ஆண்டிலேயே ’க்ரீமிலேயர் வருமான வரம்பு 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும்’ என்று தெளிவான பரிந்துரையை வழங்கியிருக்கிறது. அப்போதே பிற்படுத்தப்பட்டோர் சமுதாய நலனுக்கான நாடாளுமன்றக் குழு ’க்ரீமிலேயர் வருமான வரம்பு 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட வேண்டும்’ என்று ஒருமனதாக பரிந்துரை அளித்துள்ளது.

ஆனால், இவை எதையும் கண்டு கொள்ளாமல், பெயரளவுக்கு 6 லட்சமாக இருந்த க்ரீமிலேயர் வருமான வரம்பை 8 லட்சமாக மட்டுமே உயர்த்தி, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களை, 27 விழுக்காடு இடஒதுக்கீடு பயனை முழுவதும் அனுபவிக்க விடாமல் மத்திய பாஜக அரசு திட்டமிட்டுத் தடுத்தது.

ஆகவே, மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்திடவும், க்ரீமிலேயர் வருமான வரம்பை ரத்து செய்திடவும், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் ஏகப் பிரதிநிதி என்று தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ள பிரதமர் மோடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் “ என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: விவசாயிகளின் கறுப்புக் கொடி போராட்டத்திற்கு திமுக ஆதரவு - ஸ்டாலின் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.