கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டப்பேரவை தொகுதிக்கான முதலமைச்சர் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் தமிழ்நாடு வணிகத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி தலைமையில் நடைபெற்றது. அப்போது இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தன் கோரிக்கைகளை முன்வைத்த வேலூர் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் நந்தகுமாருக்கும் அமைச்சர் வீரமணிக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.
மேலும் கோவையில் அமைச்சர் வேலுமணி கலந்துகொண்ட அரசு நிகழ்ச்சிக்கு சென்ற திமுக சட்டப்பேரவை உறுப்பினர் நா.கார்த்திக் காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "வேலூரில் சட்டப்பேரவை உறுப்பினர் நந்தகுமாரை ஆளும்கட்சி மிரட்டியதுபோல், கோவையில் அரசு நிகழ்ச்சிக்குச் சென்ற சட்டப்பேரவை உறுப்பினர் நா.கார்த்திக் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கே இந்தக் கதி எனில் அப்பாவி மக்களின் நிலை?... சர்வாதிகாரப் போக்கை தொடரும் அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்க:
உள்ளாட்சித் தேர்தல்: அதிமுகவினரை காட்டமாக கேள்வி எழுப்பிய ஸ்டாலின்