ETV Bharat / city

அண்ணாமலை புகைப்படத்தை எரித்து திமுகவினர் போராட்டம் - Threw shoes at minister car

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி வீசிய பாஜகவினரை கைது செய்யகோரி வேலூரில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டபோது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் புகைப்படத்தை தீயிட்டுக்கொளுத்தினர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 14, 2022, 7:34 AM IST

வேலூர்: தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் இலட்சுமணனின் இறுதிசடங்கு நேற்று (ஆக். 13) மதுரையில் நடந்தது. அப்போது, அரசு தரப்பில் மரியாதை செலுத்த சென்றிருந்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது பாஜகவினர் காலணிகளை வீசினர்.

இந்நிலையில், இச்செயலை கண்டித்தும், இதில் தொடர்புடைய பாஜகவினர் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோரை கைது செய்ய கோரியும், வேலூர் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் நேற்று மாலை வேலூர் கிரீன் சர்க்கில் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அண்ணாமலையின் புகைப்படத்தை காலணியால் அடித்து கண்டன கோஷமிட்டனர். மேலும், அவர்களின் சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டது.

அண்ணாமலை புகைப்படத்தை தீயிட்டு திமுகவினர் போராட்டம்

பின்னர், வேலூர் கிரீன் சார்க் பகுதியில் உள்ள பாஜகவின் பட்டியலின அணி மாவட்ட துணைத் தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகைப்படத்தை தீயிட்டுக்கொளுத்தினர். பின்னர், காவல் துறையினரின் பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க: ஆர்டர்லிகளை திருப்பி அனுப்ப டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.