சென்னை: நடந்து முடிந்த 16ஆவது சட்டப்பேரவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அசோக்குமார், 794 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதிமுக எம்எல்ஏ.,க்களை எதிர்த்து மனு
அவரது வெற்றியை எதிர்த்து அத்தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் செங்குட்டுவன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இதேபோல, வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, 12 ஆயிரத்து 329 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஓ.எஸ்.மணியனின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வேதரத்தினம், தேர்தல் வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
வழக்கு ஒத்திவைப்பு
இந்த மனுக்களில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அதிகார துஷ்பிரயோகத்திலும், ஊழல் நடவடிக்கைகளிலும் ஈடுப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இரு தேர்தல் வழக்குகளையும் விசாரித்த நீதிபதி பாரதிதாசன், வழக்கு தொடர்பாக செப்டம்பர் 6ஆம் தேதிக்குள் பதிலளிக்க அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: காசிமேடு மூதாட்டி கொலை வழக்கில் கொலையாளி கைது