இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட திமுக எம்.பி.க்கள் கூட்டம் வருகிற 29ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டம் அண்ணா அறிவாலயத்திலுள்ள முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும். இதில் திமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில், திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் எவ்வாறு செயல்படுவது என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டு, சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.