ETV Bharat / city

தயாநிதி மாறன் அழைப்பாணையை வாங்கவில்லை - நீதிமன்றத்தில் காவல் துறையினர் பதில்

சென்னை: தமிழ்நாடு அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தியது தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு வழங்கிய அழைப்பாணையை தயாநிதிமாறன் வாங்கவில்லை என சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

dhayanithimaran, தயாநிதிமாறன்
dhayanithimaran, தயாநிதிமாறன்
author img

By

Published : Dec 26, 2019, 11:14 PM IST

தமிழ்நாடு அரசுப் பேருந்து கட்டணத்தை உயர்த்தியதைக் கண்டித்து 2018 ஜனவரி 29ஆம் தேதி தயாநிதிமாறன் தலைமையில் திமுகவினர், சென்னை சேத்துப்பட்டு சிக்னலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது தொடர்பாக, சேத்துப்பட்டு காவல் துறையினர், தயாநிதிமாறன் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ. ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆஜராகுமாறு, தயாநிதிமாறன் உள்பட 20 பேருக்கும் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது. ஆனால், தயாநிதிமாறனைத் தவிர, மற்ற 19 பேர் நீதின்றத்தில் ஆஜராகினர்.

வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு, அழைப்பாணை கொடுத்தும் தயாநிதிமாறன் தரப்பில் வாங்கவில்லை எனக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மீண்டும் புதிய அழைப்பாணை வழங்க, காவல் துறையினருக்கு உத்தரவிட்டு ஜனவரி 8ஆம் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Intro:Body:தமிழக அரசை கண்டித்து போராட்டம் நடத்தியது தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகமாறு வழங்கிய சம்மனை, தயாநிதிமாறன் வாங்கவில்லை என, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு, பஸ் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து, 2018 ஜனவரி 29 ஆம் தேதி, தயாநிதிமாறன் தலைமையில், தி.மு.க. வினர், சென்னை சேத்துப்பட்டு சிக்னலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது தொடர்பாக, சேத்துப்பட்டு காவல்துறையினர், தயாநிதிமாறன் உட்பட, 20 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு, எம்.பி, எம்.எல்.ஏ. க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ஆஜராகுமாறு, தயாநிதிமாறன் உட்பட 20 பேருக்கும் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால், தயாநிதிமாறனை தவிர, மற்ற 19 பேர் நீதின்றத்தில் ஆஜராகினர்.

வழக்கை விசாரணைக்கு ஆஜராகுமாறு, சம்மன் கொடுத்தும் தயாநிதிமாறன் தரப்பில் வாங்கவில்லை என, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதயைடுத்து, மீண்டும் புதிய சம்மன் வழங்க, போலீசாருக்கு உத்தரவிட்டு, ஜனவரி 8 ஆம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.