சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று(மார்ச் 9) கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
இது குறித்து ட்வீட் செய்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “முதல் தடுப்பூசியை இன்று (மார்ச் 9) செலுத்திக்கொண்டேன். குறுகிய காலத்தில் சளைக்கா முயற்சிகளால் நமக்கு வெற்றிகரமாகத் தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.
தொடர்ந்து நலத்தோடும் பாதுகாப்போடும் இருப்பதற்கான நடவடிக்கைகளை நாம் அனைவரும் மேற்கொள்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...இன்று தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர்