ETV Bharat / city

‘திமுகவின் நாளைய ஆர்ப்பாட்டம் எந்த அதிர்வலையையும் ஏற்படுத்தாது!’ - ஆர்பாட்டம்

சென்னை: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் திமுகவின் நாளைய ஆர்ப்பாட்டம் தேசிய அளவில் எந்த அதிர்வலைகளையும் ஏற்படுத்தாது என அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

திமுக
author img

By

Published : Aug 22, 2019, 3:55 AM IST

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் சிறை பிடிக்கப்பட்டுள்ள காஷ்மீர் தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தி நாளை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லி ஜந்தர்மந்தரில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

மத்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீர் சிற்பபு அந்தஸ்தை ரத்து செய்ததைத் தொடர்ந்து பல முக்கிய எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தது. குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக கண்டனம் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் மற்ற எதிர்க்கட்சிகளை காட்டிலும் திமுகவின் எதிர்ப்பு மிகுந்த எழுச்சியுடன் இருந்தது. முன்னதாக ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக திமுக அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டியிருந்தது.

அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி

இந்நிலையில், நாளை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். தேசிய அளவில் பலம் வாய்ந்தவையாகக் கருதப்படும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அமைதி காக்கும் நிலையில், திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இது குறித்து நமது ஈடிவி பாரத் செய்திகளுக்கு பேட்டியளித்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கூறுகையில், ‘நாளை திமுக நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்தை ஏற்பதால் தேசிய அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இந்த விவகாரம் தேச பாதுகாப்பு மற்றும் இந்து மதம் தொடர்புடையது. பாஜகவுக்கு இந்த விவகாரத்தால் எந்த பாதிப்பும் இல்லை. மேலும் இந்த விவகாரம் மூலம் கூடுதலாக பாஜக மிதவாத இந்துக்களின் ஆதரவைப் பெற பார்க்கின்றது.

தமிழ்நாட்டில் திமுகவிற்கு பாஜகவால் ஆபத்து இல்லை எனபதால் திமுக இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. ஆனால் ஆந்திரா, தெலங்கானா, ஹரியானா போன்ற மாநிலங்களில் உள்ள மாநில கட்சிகளுக்கு பாஜகவால் ஆபத்து உள்ளது என்பதால் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாட்டையே எடுத்துள்ளனர். ஏனென்றால், அப்பகுதியில் உள்ள பெரும்பான்மையான இந்துக்களின் வாக்குகள் பாதிக்கப்படக்கூடாது என எண்ணுகின்றனர்.

இந்திய அளவில் எந்த கட்சியும் இந்த விவகாரத்தில் பெரிதாகக் குரல் கொடுக்கமாட்டார்கள். ஏனென்றால் இந்து வாக்குகளை மையப்படுத்தி உள்ளதால் மற்ற மாநில கட்சிகளும், தேசிய கட்சிகளும் அஞ்சுவார்கள். தமிழகத்தில் தற்போதைய நிலையில் ஸ்டாலினின் இந்த முடிவு திமுகவிற்கு பாதிப்பு ஏற்படுத்தாது. மேலும் இதனால் அவருக்கு ஏற்கனவே உதவும் சிறுபான்மையினர் வாக்குகள் வலுப்பெறும். ஒருவேளை ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் இது மாறுபடும்’ என தெரிவித்தார்.

Intro:

Body:Visuals

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.