ETV Bharat / city

கட்சி பாகுபாடின்றி அன்பழகனுக்கு அஞ்சலி! - tribute without party discrimination

சென்னை: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவிற்கு கட்சி பாகுபாடின்றி அனைத்துத் தலைவர்களும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

திமுக பொதுச்செயலாளர்
திமுக பொதுச்செயலாளர்
author img

By

Published : Mar 7, 2020, 11:37 PM IST

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் இன்று அதிகாலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி காலாமானர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து திமுக தலைவர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

அதிகாலை முதலே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த திமுக தொண்டர்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்கள். ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் குவிந்ததால் பலத்த காவல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கட்சி பாகுபாடின்றி அதிமுக சார்பில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, காங்கிரஸ் கட்சியின் சார்பில் குஷ்பு என ஏராளமானோர் அன்பழகனுக்கு மரியாதை செலுத்தினார்கள்.

இதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பேராசிரியர் அன்பழகனின் உடல் ஊர்வலமாக கீழ்ப்பாக்கம் அருகாமையில் உள்ள வேலாங்காடு மின் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, தகனம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: இனமானப் பேராசிரியர் அன்பழகனின் புகைப்படத் தொகுப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.