ETV Bharat / city

சென்னையில் நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டம்! - DMK General Committee

சென்னை: திமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது.

திமுக பொதுக்குழு கூட்டம்
author img

By

Published : Nov 10, 2019, 10:00 AM IST

திமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10 மணி அளவில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடந்து முடிந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டபேரவை இடைதேர்தலில் திமுக கூட்டணி தோல்வி அடைந்த நிலையில், தற்போது நடைபொறும் திமுக பொதுக்குழு கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாதாக கருதப்படுகிறது.

இன்று நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் பல முக்கியமான மாற்றங்கள் கட்சியில் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதால், அவரது பணியை பார்த்துக்கொள்ள செயல் பொதுச்செயலாளர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

மேலும் கட்சியின் விதிப்படி பொதுச்செயலாளருக்கு உள்ள சில அதிகாரங்களை தலைவருக்கு மாற்றும் வகையில் விதிகளை மாற்றி அமைக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வரும் டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதை பற்றியும் இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பற்றி விவாதிக்க திமுக மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் நாளை நடைபெறகிறது.

இதையும் படிங்க: அமைச்சர் உருவபொம்மை எரிப்பு: திமுக செயலாளர் உள்பட 26 பேர் கைது!

Intro:Body:திமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைப்பெற உள்ளது.

இதனை தொடர்ந்து பொதுக்குழு நடைப்பெறும் இடமான இராயப்பேட்டை ஒய் எம் சி ஏ மைதானத்தின் ஏற்பாடுகளை பார்வையிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.