ETV Bharat / city

'உள்ளாட்சித் தேர்தக்கு தடை கோரிய திமுக படுதோல்வியடைந்துள்ளது' -  திண்டுக்கல் சீனிவாசன்

author img

By

Published : Dec 18, 2019, 8:09 PM IST

சென்னை: உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக திமுக தொடுத்த வழக்குகளில் எல்லாம் படுதோல்வி அடைந்திருக்கிறது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

சென்னை விமான நிலையத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 'உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதற்கு மூன்று முறை உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்குப் தொடுத்துள்ளது. இதற்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கடும் கண்டனத்தை தெரிவித்தார்.

மேலும், உள்ளாட்சித் தேர்தலில் நிற்க திமுகவிற்கு விருப்பமில்லையா, ஏன் போட்டியிட மறுக்கிறீர்கள், எதற்கு தடை கேட்கிறீர்கள் என பல கேள்விகள் எழுப்பிய நீதிபதி தடைபோட முடியாது என தெரிவித்தார். வழக்கு போட்டால் தேர்தலை நிறுத்தலாம் என நினைத்துக் கொண்டிருந்த திமுகவினருக்கு நீதித்துறை உரிய பதிலளித்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

திமுக வழக்கு போட்டாலும் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராக இருக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு கூறியது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாமல் பேசுவது போல் உள்ளது என்றார்.

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து மாணவர்கள் அதிகளவில் போராட்டம் நடத்திவருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு, தமிழ்நாடு முதலமைச்சரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அதற்கான தெளிவான விளக்கத்தை சொல்லி இருக்கின்றனர். தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குவது போன்று நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்றார்.

Intro:வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி
Body:வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி

உள்ளாட்சித் தேர்தலுக்கு எதிராக திமுக தொடுகின்ற வழக்குகளில் எல்லாம் படு தோல்வி அடைந்திருக்கிறார்கள்.

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதற்கு மூன்று முறை உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்குப் போட்டுள்ளது. இதற்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கடும் கண்டனத்தை தெரிவித்தார். திமுக உள்ளாட்சித் தேர்தலில் நிற்க விருப்பமில்லையா,நிற்க ஏன் மறுக்கிறீர்கள்,எதற்கு தடை கேட்கிறீர்கள். என கேள்விகள் எழுப்பிய நீதிபதி தடைபோட முடியாது என தெரிவித்தார்.

திமுக வழக்கு போட்டால் அது நடந்து விடும் என திமுகவினர் நினைத்துக் கொண்டுள்ளனர். அது நடக்காது என நீதித்துறை தன்னை நிலைநாட்டி இருக்கிறது

திமுக வழக்கு போட்டாலும் உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராக இருக்கிறது என திருநாவுக்கரசு கூறிய கருத்துக்கு

கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்றுதான் கூறுவார்கள் வேறு ஒன்றும் கூறவும் முடியாது.

திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மையம் கட்சி பங்கேற்கும் என கமலஹாசன் கூறியது அவருடைய விருப்பம் எனத் தெரிவித்தார்

வனத்துறை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் காலியிடங்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை அனைத்து இடங்களும் நிரப்ப வேண்டும் என முதல்வர் உத்தரவின்படி காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறோம்

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து மாணவர்கள் அதிகளவில் போராட்டம் நடத்தி வருவதை பற்றி கேட்டதற்கு

தமிழக முதல்வரும்,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அதற்கான தெளிவான விளக்கத்தை என்று சொல்லி இருக்கின்றனர். தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குபவர்களை போன்று நடிப்பவர்களை எழுப்ப முடியாது இவ்வாறு கூறினார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.