ETV Bharat / city

'இந்தப்பக்கம் கருணாநிதி; அந்தப்பக்கம் ஸ்டாலின்' - நகல் மனிதர்களுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த திமுக நிர்வாகி! - DMK alliance candidate came in procession with volunteers and filed his nomination

தாம்பரத்தில் அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் வேடமிட்டு வந்த நபர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து திமுக கூட்டணி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

மேள தாளத்தூடன் வேட்புமனு தாக்கல் செய்த திமுக நிர்வாகி

author img

By

Published : Feb 4, 2022, 8:13 PM IST

சென்னை: வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளான இன்று(பிப்ரவரி.04) வேட்புமனு தாக்கல் களைகட்டியது. அதில் தாம்பரம் மாநகராட்சியில் முக்கிய அரசியல் கட்சியினர் மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தாம்பரம் மாநகராட்சி 50ஆவது வார்டில் திமுக கூட்டணி சார்பில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தாம்பரம் யாகூப், செண்டை மேளத்துடன் அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் வேடமணிந்து வந்த ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக வந்து தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மேள தாளத்துடன் வேட்புமனு தாக்கல் செய்த திமுக நிர்வாகி

அதேபோல் பெருங்களத்தூரில் திமுக வேட்பாளர் சேகர், புகழேந்தி, கமலா, மதுமிதா ஆகியோர் ஒன்று சேர்ந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதையும் படிங்க: முடிவடைந்த வேட்பு மனு தாக்கல்: 7ஆம் தேதி வெளிவரும் இறுதி வேட்பாளர் பட்டியல்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.