ETV Bharat / city

துரைமுருகன் பங்கேற்காத திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - உள்ளாட்சி தேர்தல்

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

stalin
author img

By

Published : Nov 11, 2019, 1:31 PM IST

திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல முக்கிய தீரமானங்கள் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன. மேலும் தற்போது தமிழ்நாட்டில் நடைபெறும் அதிமுக தலைமையிலான ஆட்சியினை விரைவில் அகற்றி திமுக தலைமையில் புதிய ஆட்சி அமைய கட்சியின் ஒவ்வொரு தொண்டனும் பாடுபட மாவட்ட செயலாளர்கள் வழிநடத்திட வலியுறுத்தப்பட்டது.

அதேபோல் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் கட்சி மாபெரும் வெற்றி பெற்று பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில் கட்சியின் பலத்தை அதிகரித்து அதன் வாயிலாக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவது குறித்தும், அதற்கு கட்சியினர் செயல்படும் விதம் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

மேலும், தமிழ்நாடெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் திமுக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டங்கள் ஊர்தோறும், திண்ணை தோறும் பிரசாரம் செய்ய வேண்டும் என்பன உள்பட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:

Body:சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலிந் தலைமையில் நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி அமைப்பில் தேர்தலை எதிர்கொள்வது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

தி.மு.க பொருளாளர் துரைமுருகன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளதால் அவர் இக்கூட்டத்தில் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.