இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ கரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவரின் உடலை மயானத்திற்குக் கொண்டுச் சென்றபோது அந்த வாகனத்தை பொதுமக்கள் மறித்துத் தாக்கி எதிர்ப்பு தெரிவித்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.
நோய்த் தொற்று குறித்த மக்களுக்கு உள்ள குழப்பமும் அச்சமுமே இத்தகைய மோசமான சூழலை உருவாக்குகிறது. இதனைத் தவிர்க்கும் வகையில், கரோனாவால் உயிரிழக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் உடலை அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்வதற்கும், பொதுமக்கள் இறக்க நேரிட்டால் அவர்களின் உடலை காவல்துறையின் உரிய பாதுகாப்புடன் இறுதிச் சடங்கு செய்வதற்கும் அரசு ஆவன செய்ய வேண்டும்.
பேரிடர் காலத்தில் பொதுமக்கள் தேவையற்ற அச்சத்தைத் தவிர்த்து, அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கி மனிதாபிமானம் பேணிட வேண்டும் “ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா உயிரிழப்பு - உடல்கள் தகனம் செய்வதை தடுக்க வேண்டாம் என வேண்டுகோள்!