இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், "தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைதேர்தலில் ஒன்பது இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், அமைச்சர்களுக்கும், வேட்பாளர்களுக்கும், தேமுதிக சார்பாக எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மக்களவைத் தேர்தலிலும், சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் அயராது பாடுபட்ட கூட்டணி கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தேமுதிக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், வாக்களித்த மக்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் மக்களுக்கான ஆக்கப்பூர்வமான பணியில் என்றும் தேமுதிக தொடர்ந்து ஈடுபட்டு அயராது பணியாற்றும்" என கூறப்பட்டுள்ளது.