ETV Bharat / city

’இந்தியா இந்து நாடல்ல' - வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பு என கி. வீரமணி பாராட்டு! - வீரமணி

சென்னை: ’இந்தியா இந்து நாடல்ல; மதச்சார்பற்ற நாடு’ என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பு பாராட்டுக்குரியது எனத் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

veeramani
veeramani
author img

By

Published : Apr 29, 2020, 3:47 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு ஏழை இஸ்லாமியர்களுக்கு நோன்புக் கஞ்சிக்காக 5,460 டன் பச்சரிசியை வழங்கக்கூடாது என்று இந்து முன்னணி என்ற அமைப்பின் செயலாளர் குற்றாலநாதன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை உயர் நீதிமன்றத்தில் தொடுத்துள்ளார்.

இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, இந்து முன்னணி பதிவுசெய்யப்பட்ட அமைப்பா? என்று கேட்ட கேள்விக்கு, வாதாடிய வழக்குரைஞர் சரியான பதிலை அளிக்க முடியாததால், தனி நபர் வழக்காக வாதாடப்பட்டது.

அப்போது, வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பாடு உள்ள நாட்டில் மதச்சார்பின்மைதான் முக்கியமானது என்பதை ‘பிரபுல்லா கொராடியா Vs இந்திய யூனியன்’ என்ற உச்ச நீதிமன்றத்தின் முந்தைய வழக்கொன்றின் (2011) தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்புக் கூறியுள்ளது.

அத்தீர்ப்பில், இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, அது ஒரு இந்து நாடு அல்லவென்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால்தான் நாடு பிரிவினையின்போது நாம் பல சோதனைகளையும்கூட நிதானத்துடன் தீர்க்க முடிந்தது என்று குறிப்பிட்டு, இலவசமாக இஸ்லாமியர்களுக்கு நோன்புக் கஞ்சிக்கான அரிசி வழங்கக் கூடாது என்ற இந்து முன்னணியின் கோரிக்கையை ஏற்க இயலாது என்று தள்ளுபடி செய்துள்ளனர்.

இந்து முன்னணி வகையறாக்களின் இத்தகைய வித்தைகளைப் புரிந்து சரியான பார்வையோடு தீர்ப்பளித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் இந்தத் தீர்ப்பு ஒரு கலங்கரை வெளிச்சமே, இதை வரவேற்றுப் பாராட்டுகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அலுவலகங்களில் நாள்தோறும் இருமுறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் - மாநகராட்சி உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.