கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், ஸ்கை லிஃப்ட் எனப்படும் 54 அடி உயரம் கொண்ட ராட்சத ஏணி மூலம் சென்னையில் உள்ள உயரமான குடியிருப்புப் பகுதிகள், மருத்துவமனைகள், சந்தைகள், அரசு அலுவலகங்கள், மக்கள் அதிகம் கூடும் கட்டடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி கட்டடமான ரிப்பன் மாளிகையிலும் ஸ்கை லிஃப்ட் மூலம் தீயணைப்புத் துறை வீரர்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.