இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில்,
”2020-21ஆம் நிதியாண்டுக்கு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை வளர்ச்சிக்காக தயாரிக்கப்பட்டது. நிதி நெருக்கடி உள்ள காலகட்டத்தில் எதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சிந்தித்து தயாரிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கை. மூலதன செலவுக்காக 26 விழுக்காடு கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் சாலை, மின்சாரம், பாசன வசதி உள்ளிட்டவற்றுக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
2019-20ஆம் நிதி ஆண்டில் மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய வரி வசூல் ஏழாயிரத்து 586 கோடி ரூபாய் குறைந்துள்ளது. இந்தியாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அளவில் நிதி வழங்குவது தமிழ்நாட்டில் மட்டும்தான். ஆண்டுதோறும் மாநிலத்தின் வருமானம் அதிகரித்துவருகிறது. வருமானத்தில் 25 விழுக்காடு கடன் இருந்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 21.83 விழுக்காடு மட்டுமே கடன் உள்ளது.
ஜி.எஸ்.டி. வரி உள்பட மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகை 12 ஆயிரத்து 263 கோடி ரூபாயாக உள்ளது. இயற்கை பேரிடர் காலங்களில் மாநில அரசுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் நிவாரணத் தொகை 825 கோடியிலிருந்து ஆயிரத்து 320 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க: பிப்ரவரி 20ஆம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்