சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி, மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர், கட்சி அலுவலகத்தில் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சி.டி.ரவியிடம், அரசியலிலிருந்து விலகும் சசிகலாவின் முடிவு குறித்து கேட்டபோது, அதனை வரவேற்ற அவர், ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றும் வகையில் சசிகலா முடிவெடுத்திருப்பதாகவும், அதற்காகவே பாஜகவும் அதிமுகவும் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, டிடிவி.தினகரனின் அமமுக வரும் தேர்தலில் அதிமுக வாக்குகளைப் பிரிக்காதா என்ற கேள்விக்கு, இன்னும் நேரம் இருக்கிறது என்றும், டிடிவி.தினகரனும் ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றுவார் என நம்புவதாகவும் சி.டி.ரவி பதிலளித்தார்.
மேலும், அதிமுகவை பிளவு படுத்த வேண்டும் என்றோ, ஜெயலலிதாவின் கனவை சிதைக்க வேண்டும் என்றோ, பாஜக நினைக்கவில்லை என்றும், மீண்டும் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக 234 தொகுதிகளிலும் தீவிரமாக பணி செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவைத் தேர்தல்: எம்ஜிஆரின் பேரன் நேர்காணலில் பங்கேற்பு!