ETV Bharat / city

அசைவ உணவால் உடல்நலக்குறைவு!-ஓட்டல் மீது புகார்

திருவேற்காட்டில் ஹோட்டலில் நேற்று இரவு சாப்பிட்ட இருவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால், உணவகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

author img

By

Published : May 13, 2022, 11:57 AM IST

Updated : May 13, 2022, 12:22 PM IST

திருவேற்காட்டில் உணவகத்தில் சாப்பிட்ட இருவருக்கு வயிற்றுப்போக்கு

சென்னை: திருவேற்காட்டை சேர்ந்தவர் ஸ்ரீதர்(22), இவரது நண்பர் பரத்குமார்(20), இருவரும் நேற்று இரவு திருவேற்காடு சிவன் கோவில் தெருவில் உள்ள உணவகத்தில் அசைவ உணவு சாப்பிட்டு உள்ளனர். உணவு சாப்பிட்டு வீட்டிற்கு செல்லும் போது இருவருக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், திருவேற்காடு காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அதில்,திருவேற்காடு சிவன் கோவில் தெருவில் உள்ள உணவகத்தில் சாப்பிட்ட தங்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே உணவக நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவேற்காடு காவல் துறையினர் விசாரித்து வரும் நிலையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் அந்த உணவகத்தில் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.

இதையும் படிங்க: கோவை உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் தீவிர சோதனை:கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்

Last Updated : May 13, 2022, 12:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.