சென்னை: பீளமேடு பகுதியில் பெண்ணை இடித்து விட்டு நிற்காமல் சென்ற தனியார் பள்ளி வாகனத்தை வழிமறைத்து தட்டிக் கேட்ட Swiggy ஊழியர் ஒருவரை நேற்று (ஜூன்4) போக்குவரத்து காவலர் ஒருவர் கடுமையாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகியது.
இது குறித்து பாதிக்கப்பட்ட ஊழியர், மாநகர காவலர் ஆணையரிடம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, போக்குவரத்து காவலரை கட்டுப்பாட்டு அறைக்கு பணியிடமாற்றம் செய்து கோவை மாநகர காவலர் ஆணையர் பிரதீப்குமார் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் பேரில், பீளமேடு காவல் நிலையத்தில் காவலர் சதீஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. மேலும், காவலர் சதீஸை காவல் துறையினர் கைதுசெய்த நிலையில், அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்தும் உத்தரவிட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, Swiggy ஊழியரிடம் கோவை பீளமேடு போக்குவரத்து காவலர் சதீஷ்யிடம் நிகழ்வு குறித்த விசாரணை நடத்தப்பட்டது என்று இன்று (ஜூன் 5) தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். அத்துடன் மேலும், அந்த காவலர் மீது கிரிமினல் மற்றும் துறை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், Swiggy ஊழியர் நலம்பெறவும் வாழ்த்தினார்.
இதையும் படிங்க: swiggy ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் கைது