2021ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு, ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கி செப்டம்பர் 30ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஜுன் மாதம் தொடங்கி ஜூலை மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி முதல்முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கைப்பேசி செயலி மூலமாக நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். முதற்கட்டமாக வீடுகளைக் கணக்கிட்டும், இரண்டாம் கட்டமாக மக்கள்தொகை எண்ணிக்கையைக் கணக்கிட்டும் இப்பணி நடைபெறுகிறது. வீடுகளைக் கணக்கெடுக்கும் பணிக்கான விவரங்கள் குறித்து தமிழ்நாடு அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில் கட்டட எண், வீட்டு எண், வீட்டின் நிலை, வீட்டுத் தலைவரின் பெயர், வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை, வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை உள்பட 31 கேள்விகள் கேட்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.