ETV Bharat / city

பிரதமரின் தேசிய குழந்தைகள் விருதிற்கு விண்ணப்பிக்கலாம் - சமூக நலத்துறை

சென்னை : மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் வழங்கப்படும் பிரதமரின் தேசிய குழந்தைகள் விருதிற்கு தகுதி வாய்ந்தோர் விண்ணப்பிக்கலாம் என சமூக நலத்துறை அறிவித்துள்ளது.

பிரதமரின் தேசிய குழந்தைகள் விருதிற்கு விண்ணப்பிக்கலாம் -  சமூக நலத்துறை
பிரதமரின் தேசிய குழந்தைகள் விருதிற்கு விண்ணப்பிக்கலாம் - சமூக நலத்துறை
author img

By

Published : Sep 4, 2020, 9:07 PM IST

இது தொடர்பாக சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம், ‘பிரதம மந்திரி தேசிய குழந்தைகள் விருது’ அறிவிக்கப்பட்டு, தகுதி வாய்ந்த குழந்தைகள், தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

புதிய கண்டுபிடிப்பு, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சமூக சேவை போன்ற துறைகளில் வீரதீர செயல்புரிந்த தனிதகுதி படைத்த குழந்தைகளை அங்கீகரிக்கும் விதமாக ‘பால சக்தி புரஷ்கார்’ என்னும் குழந்தைகளுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. இவ்விருது ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை புத்தகம் ஆகியவற்றை கொண்டதாகும்.

குழந்தைகள் மேம்பாடு, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலம் போன்ற துறைகளில், குழந்தைகளுக்கான சேவைகளில் தலைசிறந்த பங்களிப்பு செய்த தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் விதமாக ‘பால கல்யாண் புரஷ்கார்’ என்னும் தேசிய விருது வழங்கப்படுகிறது. தனிப்பட்ட நபர்களுக்கான விருதிற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். நிறுவனங்களுக்கான விருதிற்கு 5 லட்சம் ரூபாய்கான காசோலை, பதக்கம், சான்றிதழ் மற்றும் தகுதியுரை வழங்கப்படும்.

இவ்விருதுகளுக்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகள் மத்திய அரசின் மகளிர் மற்றும் சிறார் மேம்பாட்டு அமைச்சகத்தின் www.nca-wcd.nic.in என்னும் இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. குழந்தைகள், தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து இவ்விருதிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பிக்கப்பட வேண்டும். பிற முறைகளில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக சமர்ப்பிக்க இறுதி நாள் 15.09.2020 ஆகும். இறுதி நாளிற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இணையதளம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களில் அனைத்து தகுதிகள் பெற்ற விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு குடியரசு தினத்தை ஒட்டிய முந்தைய வாரத்தில் புதுடெல்லியில் குடியரசுத் தலைவரால் தேசிய விருது வழங்கப்படும்" என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.