நாகப்பட்டினத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து ரயில்வே நடைபாதை கட்டப்படுவதால் இந்த கட்டுமானத்துக்கு தடை விதிக்கக்கோரி எஸ்.டி. ஆறுமுகம் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நடைபாதை கட்டுமான பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வர தயார் நிலையில் இருப்பதால் தடை விதிக்கக் கூடாது என ரயில்வே தரப்பில் தெரிவிக்கபட்டது.
மேலும், நெடுஞ்சாலை ஆணையம், ரயில்வே ஆகியவற்றின் வளர்ச்சித் திட்டங்கள் அவசியம் என்றாலும் அவை இயற்கை வளங்களையும், நீர் வளங்களையும் பாதிக்காமல் இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.