டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து, தமிழ் எழுத்தாளர்கள் பாமா, சுகிர்தராணி படைப்புகளை பாடத்திட்ட மேற்பார்வைக் குழுவினர் ஆகஸ்ட் 24ஆம் தேதி நீக்கியுள்ளனர். அந்த வகையில், பாமா எழுதிய 'சங்கதி', சுகிர்தராணியின் எழுதிய 'கைம்மாறு' ஆகிய மொழியாக்கப் படைப்புகள் நீக்கப்பட்டுள்ளன.
அத்துடன் பிரபல எழுத்தாளர் மகா ஸ்வேதா தேவியின் திரௌபதி படைப்பும் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், ஜோதிமணி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
-
டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து மகாஸ்வேதாதேவி பாமா,சுகிர்தராணி ஆகிய காத்திரமான தலித்திய,பெண்ணிய படைப்பாளிகளின் படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பெண்கள்,பட்டியலின மக்களுக்கு எதிரான பிஜேபி/ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் அழித்தொழிப்பு நடவடிக்கையே இது
— Jothimani (@jothims) August 26, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து மகாஸ்வேதாதேவி பாமா,சுகிர்தராணி ஆகிய காத்திரமான தலித்திய,பெண்ணிய படைப்பாளிகளின் படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பெண்கள்,பட்டியலின மக்களுக்கு எதிரான பிஜேபி/ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் அழித்தொழிப்பு நடவடிக்கையே இது
— Jothimani (@jothims) August 26, 2021டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து மகாஸ்வேதாதேவி பாமா,சுகிர்தராணி ஆகிய காத்திரமான தலித்திய,பெண்ணிய படைப்பாளிகளின் படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பெண்கள்,பட்டியலின மக்களுக்கு எதிரான பிஜேபி/ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் அழித்தொழிப்பு நடவடிக்கையே இது
— Jothimani (@jothims) August 26, 2021
இதுகுறித்து, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், "டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து மகாஸ்வேதாதேவி பாமா, சுகிர்தராணி ஆகிய தலித்தியப் பெண்ணிய படைப்பாளிகளின் படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
பெண்கள், பட்டியலின மக்களுக்கு எதிரான பாஜக, ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் அழித்தொழிப்பு நடவடிக்கையே இது. பாமாவும், சுகிர்தராணியும் பாஜக, ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை உறுதியோடு எதிர்க்கிற தமிழ்மண்ணின் படைப்பாளிகள். மோடி அரசின் இந்த பாசிச செயல்பாடு கடுமையான கண்டனத்திற்குரியது. உடனடியாக நீக்கப்பட்ட படைப்புகள் மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கே.டி.ராகவன் விவகாரம் - டிஜிபி அலுவலகத்தில் எம்.பி ஜோதிமணி புகார்