சென்னை: ஆவடி பருத்திப்பட்டு ஏரியில் குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு லட்சம் பனை விதைகள், மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
சர்வதேச உரிமை கழகம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர் கலந்துகொண்டு அப்துல் கலாமின் உருவப் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
அதன்பின் பனை விதை, மரக்கன்றுகளை நட்டு விழாவைத் தொடங்கிவைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்த சா.மு. நாசர், "கடந்த ஆண்டு ஆட்சியில் தீபாவளி பண்டிகைக்கு ஆவின் பொருள்கள் 1.2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டன.
இந்தாண்டு அதைவிட அதிகமாக 2.2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். மேலும் நிர்ணயித்த விற்பனையைவிட அதிக அளவில் இனிப்புகள் உள்ளன" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தீபாவளிக்கான ஆவின் இனிப்புகளை விலை கொடுத்து வாங்குங்கள்!