தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை கடந்த 13ஆம் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 14ஆம் தேதி முதல்முறையாக வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இதனையடுத்து இன்று (ஆக. 16) இந்த பட்ஜெட் தொடர்பான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெறவுள்ளது.
காலை 10 மணிக்கு மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படவுள்ளது. இதன் பிறகு நடைபெறும் விவாதத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உரையாற்றவுள்ளனர்.
இதில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள்.
இதையும் படிங்க: 'பவானிசாகரில் நுண்ணுயிர்ப் பாசனத்திட்டம் குறித்து உழவர்களிடம் கலந்துபேசி முடிவு'