ETV Bharat / city

மன அழுத்தத்தை குறைக்க ‘டான்ஸ் தெரபி’ - மகிழ்ச்சியில் சிறைக் கைதிகள் - புதுச்சேரி சிறைக்கைதிகள்

புதுச்சேரி சிறைக் கைதிகளுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் ‘டான்ஸ் தெரபி’ பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.

சிறை கைதிகளுக்கு ‘டான்ஸ் தெரபி’
சிறை கைதிகளுக்கு ‘டான்ஸ் தெரபி’
author img

By

Published : Apr 27, 2022, 6:50 PM IST

புதுச்சேரி: காலாப்பட்டு பகுதியில் 290 சிறைக் கைதிகளுடன் மத்திய சிறைச்சாலை இயங்கி வருகிறது. இதில் 2 பெண் கைதிகளும் அடங்குவர். குறிப்பாக தண்டனை மற்றும் விசாரணை கைதிகளுக்கு அவர்களது மன அழுத்தம் குறையும் வகையில் மத்திய சிறைச்சாலை நிர்வாகம் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

அதாவது அவர்களுக்கு டான்ஸ் தெரபி என்ற புதிய பயிற்சியை தனியார் உதவியுடன் செய்து வருகிறது. ஆரம்பகட்டத்தில் 5 கைதிகள் மட்டுமே இதில் ஆர்வம் காட்டினர். ஆனால், கடந்த செப்டம்பர் மாதம் முதல் இந்த பயிற்சிகள் 25க்கும் மேற்பட்ட கைதிகள் நடன பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தப் பயிற்சியை கைதிகளுக்கு புதுச்சேரி கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியை கிருத்திகா ரவிச்சந்திரன் இலவசமாக மேற்கொண்டு வருகிறார். இதனால், மன அழுத்தம் வெகுவாக குறைந்து மகிழ்ச்சி தருவதாக கைதிகள் தெரிவித்துள்ளனர்.

சிறைக் கைதிகளுக்கு ‘டான்ஸ் தெரபி’

மேலும் கைதிகளின் குழந்தைகளுக்கு இலவசமாக தனது நடனப் பள்ளியில் பயிற்சி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரி காலாண்டு சிறையில் சிறை நிர்வாகமானது அவர்களுக்கு சிறை வளாகத்தில் விவசாயம் செய்யவும் வழிவகுத்துள்ளது.

மேலும், கால்நடைகளை வளர்ப்பது, கைவினைப் பொருள்களை செய்வது போன்ற செயல்பாடுகளிலும் சிறைத்துறை நிர்வாகம் கைதிகளுக்கு உதவியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'ஆஹா... மாற்றம் ஒன்றே மாறாதது' - புதுச்சேரி மத்திய சிறையில் இயற்கை விவசாயம் செய்யும் கைதிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.