தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை நாளை (மார்ச் 22) வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அதிமுக திரும்பப் பெற வலியுறுத்தப்படும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை பாஜக அலுவலகத்தில் திமுக கூட்டணியை நிராகரிக்க நூறு காரணங்கள் என்ற தலைப்பில் உள்ள புத்தகத்தை சி.டி. ரவி வெளியிட, பாஜக இணை தேர்தல் பொறுப்பாளர் வி.பி. சிங் பெற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சி.டி. ரவி, “திமுக கடந்த காலங்களில் மக்களுக்கு பல்வேறு இன்னல்களை நிகழ்த்தியுள்ளது. கருணாநிதிக்கு பின்னர் திமுக ஸ்டாலின் வசம், அதன் பின்னர் உதயநிதி ஸ்டாலின் வசம். திமுகவில் உட்கட்சி ஜனநாயகமும் கிடையாது. 2017இல் அதிமுக ஆட்சி இப்போது கவிழ்ந்துவிடும் என்றார்கள் ஆனால் நான்கு ஆண்டுகள் வெற்றிகரமாக ஆட்சி செய்துள்ளனர்.
திமுக, காங்கிரஸ் ஆட்சி பணம் சம்பாதிப்பதையே நோக்கமாக கொண்டு செயல்பட்டது, தினந்தோறும் ஊழல், கட்டப் பஞ்சாயத்து, நில அபகரிப்பே திமுக வின் பிரதான வேலை. நாளை (மார்ச் 21) கட்கரி தேர்தல் அறிக்கையை வெளியிடுவார்.
பாஜக-வின் மூத்த தலைவர்கள் தொடங்கி, பிரதமர் மோடி வரை தமிழ்நாட்டில் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளனர். மோடி இரண்டு, மூன்று சுற்று பயணங்கள் மேற்கொள்வார். சிஏஏ-வை கைவிடும் திட்டம் இல்லை” என்றார்.
இதையும் படிங்க...நடனமாடி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!