ETV Bharat / city

10 நாட்களில் சுமார் 1.16 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல் - 183 கோடியே 13 லட்சம் ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது

2020-2021ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக, கடந்த 10 நாட்களில் 183 கோடியே 13 லட்சம் ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு
author img

By

Published : Apr 15, 2022, 9:25 PM IST

சென்னை: வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், '2020-21ஆம் ஆண்டு ராபி பருவத்தில் காப்பீடு செய்யப்பட்ட நவரை நெல், கோடை நெல், உளுந்து, பச்சைப்பயிறு, நிலக்கடலை, எள், பருத்தி, மக்காச்சோளம், சோளம், சிவப்பு மிளகாய் போன்ற பயிர்களில், மகசூல் இழப்பினால் பாதிப்படைந்த, தகுதி வாய்ந்த ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 947 விவசாயிகளுக்கு, கடந்த 10 நாட்களில் மட்டும், 183 கோடியே 13 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதில் கடலூர், ஈரோடு, நாமக்கல், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை, விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில், நவரை நெல், கோடை நெல், உளுந்து, பச்சைப்பயிறு, நிலக்கடலை, எள், பருத்தி, மக்காச்சோளம், சோளம் மற்றும் சிவப்பு மிளகாய் பயிர்களுக்கும்- கரூர், திருப்பூர், அரியலூர் திண்டுக்கல், காஞ்சிபுரம், தூத்துக்குடி, செங்கல்பட்டு, மதுரை, தேனி மாவட்டங்களில் உளுந்து பயிருக்கும் இழப்பீடுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு எடுத்த தொடர் நடவடிக்கையினால், 2020-21ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்த, பாதிக்கப்பட்ட விவசாயிகளில், இதுவரை (14.04.2022ஆம் தேதி வரை) இரண்டாயிரத்து 285 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகை, தகுதி வாய்ந்த 10 லட்சத்து 89 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும், மேலும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு சுமார் 200 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையினை வழங்குவதற்கு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சென்னை: தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்புப் பிரார்த்தனை

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.