சென்னை திருவொற்றியூர் கார்கில் நகர் மணலி சாலையின் அருகே பக்கிங்காம் கால்வாய் செல்கிறது. இந்தப் பகுதியில் மாடுகள் வந்து கால்வாயை ஒட்டியுள்ள செடிகளை சாப்பிட்டுச் செல்லும். அவ்வாறு சென்றதில் ஒரு பசு மாடு தவறி கால்வாய் சேற்றில் விழுந்து சிக்கி கொண்டது.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி கால்வாயில் இறங்கி உயிருக்குப் போராடி கொண்டிருந்த பசுவை மீட்டனர்.
பின்னர் பசு மாடு நலமாக இருப்பதை அறிந்த பின்னர் பசு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. கால்வாயில் சிக்கிய பசுவை உடனடியாக விரைந்து மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
இதையும் படிங்க: 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த பசு மாடு மீட்பு