சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோவிஷுல்ட் தடுப்பூசி பரிசோதனை தமிழ்நாட்டில் சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்யப்படுகிறது.
இதற்கான அனுமதியை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வழங்கியுள்ளது. இந்தத் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு விரும்பும் தன்னார்வலர்கள் ஆர்வமுடன் முன்வரலாம் எனப் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து அதன் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கோவிட்-19 தடுப்பு மருந்து சோதனையை நடத்த இருக்கிறோம். இதற்கு சிரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இணை ஸ்பான்சராகவும் உள்ளன.
இந்தத் தடுப்பு மருந்து சோதனையில் பங்கேற்பது முற்றிலும் தன்னார்வ அடிப்படையிலானது. நீங்கள் 18 வயதிற்கு மேலானவராக இருந்து இந்தப் பரிசோதனையில் பங்கேற்க ஆர்வமாக இருந்தால் செயல்திட்ட ஒருங்கிணைப்பாளரை 7806845198 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
மேலும் covidvaccinetraildph@gmail.com என்னும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியும் சேர்ந்துகொள்ளலாம்" எனக் கூறியுள்ளார்.